ரயில்வே துறைக்கு கோடிகளில் இழப்பு!

Filed under: இந்தியா |

ரயில்வே துறைக்கு அக்னிபாத் போராட்டங்களால் ரூ259.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே இணையமைச்சர் தகவல் அளித்துள்ளார்.

வட மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்தினால் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. பல ரயிலுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்நிலையில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்களில் நடந்து வன்முறைகளால் இந்திய ரயில்வேக்கு ரூ259.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஜூன் 14ம் தேதி முதல் 30ம் தேதி வரை ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு பயணிகள் டிக்கெட் கட்டண தொகை சுமார் ரூ.102.96 கோடி திருப்பி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.