ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

Filed under: இந்தியா |

ரூ.3கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகளை ஆந்திராவில் வெட்டியதாக 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக ஆந்திர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சித்தூரில் நடத்திய வாகன தணிக்கையில் ரூ. 3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தப்பட்ட இந்த செம்மரக்கட்டைகளை தமிழகத்தை சேர்ந்த 7 பேர் வெட்டியதாக ஆந்திரா காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 3 வாகனங்களையும் ஆந்திரா காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.