லேடி சூப்பர் ஸ்டாருக்கு டும் டும் டும்!

Filed under: சினிமா |

ஜூன் 9ம் தேதி திருப்பதியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று வரை குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அவருக்கான ரசிகர்கள் கூட்டம் ஏராளமான இருக்கிறார்கள். அவரை குறித்து ஏதேனும் செய்திகள் வெளியாகினால் அது மக்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.

அதிலும் நயன்தாராவின் திருமணம் குறித்த தகவல் வெளியானதால் அது பெரும்பாலானோர் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய “நானும் ரவுடி தான்” படத்தின் போது, நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. நிச்சயதார்த்தமும் முடிந்துள்ளது.
நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் இவர்கள் இருவருக்கும் வருகிற ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த நயன்தாராவும்- விக்னேஷ் சிவனும் திருமண ஏற்பாடுகளை பார்வையிட்டனர் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை.