வரும் 28ம் தேதி கருணாநிதி சிலை திறப்பு!

Filed under: சென்னை |

முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி சிலையை திறந்து வைக்க துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் வரும் 28ம் தேதி திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிலையை திறந்து வைக்க துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வரும் 28ம் தேதி சென்னை வரவிருக்கிறார். இந்த சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.