விசாரணை கைதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

Filed under: சென்னை |

சென்னையில் போதைப்பொருள் வழக்கில் கைதானவர் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ராயப்ப ராஜூ என்பவர் 48 கிலோ போதை பொருள் வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தங்களது அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். மூன்றாவது மாடியில் இந்த விசாரணை நடந்து கொண்டிருந்த போது திடீரென 13வது மாடியிலிருந்து ராயப்ப ராஜூ கீழே குதித்து விட்டார். இதையடுத்து அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டார். போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணை செய்யப்பட்டவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.