வேட்டைக்காரன், காதலில் விழுந்தேன், அங்காடித்தெரு உள்பட பல படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த “நான்” என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதால் பின்பு சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் போன்ற பல படங்களை நடித்துள்ளார்.
தற்போது இவர் நடித்து மெகா ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகியது. இந்த தகவலைஉறுதி படுத்தியுள்ளனர். விஜய் ஆண்டனி நடித்து ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய தகவல்களை வரும் 24ஆம் தேதி அதாவது விஜய் ஆண்டனியின் பிறந்தநாளில் அதிக பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
இவர் நடித்து சூப்பர் ஹிட்டான படம் பிச்சைக்காரன் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தான் எடுக்க போகிறார்கள் என பல எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது. ஆனால் 24 ஆம் தேதி வரை பொறுத்து இருந்து பாப்போம்.
மேலும் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி போன்ற படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.