அஜித்தின் வலிமை படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

Filed under: சினிமா |

சென்னை, செப் 23:
அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகர் அஜித்தின் 60வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இதில், போனி கபூர், யோகிபாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்; யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி, நேற்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி வலிமை படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரும் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என, தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்துள்ளார்.