கடந்த சில நாட்களாக இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாக ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார்.
இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கண்ணீர்புகை குண்டு, அதனை அடுத்து துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் அப்பாவி ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளதாகவும் மேலும் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.