மாநகராட்சி அதிகாரிகள் சென்னையில் திடீரென்று ஆய்வு செய்து 130 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிகள் சென்னையில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்கு சொந்தமான 400 கடைகளில் 130 கடைகள் கடந்த சில ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்ததாக கூறப்பட்டது. வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியும் கடைகளில் இருந்து வாடகை வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து வாடகை தொகை நிலுவையில் இருந்த 130 கடைகளில் 40 லட்ச ரூபாய் வரவேண்டிய உள்ள நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அந்த 130 கடைகளுக்கு சீல் வைத்தனர். வாடகையை சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் செலுத்திய பின்னரே சீல் அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.