சென்னை மாநகராட்சி தமிழகத்தில் தற்போது கான்க்ரீட் மற்றும் தார் சாலைகள் போடப்படுவதற்கு மாற்றாக புதிய சாலையை போட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையில் கான்கிரீட் சாலைகளுக்கு பதிலாக பேவர் பிளாக் என்ற சாலை போட சென்னை மாநகராட்சியில் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேவர் பிளாக் சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு எடுத்துள்ளதாகவும் முதல் கட்டமாக மணலி, ராயபுரம் வளசரவாக்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 2.75 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூபாய் 1.71 கோடி செலவில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சாலைகள் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர் அதிகரிக்கும் என்றும் சாலைகளில் நீர் தேங்காது என்றும் கூறப்படுகிறது.