செரீனா வில்லியம்ஸ் டென்னிஸ் விளையாட்டிலிருந்து தான் ஓய்வு பெறவில்லை என்றும், தன்னால் இன்னும் டென்னிஸ் விளையாட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான வில்லியம்ஸ் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தை தரவரிசையில் பெற்றிருந்தார். ஆனால் அதே நேரத்தில் குழந்தை பிறந்த பிறகு செரினா வில்லியம்ஸ் சரியாக விளையாடவில்லை, அதனால் பல தோல்விகளை அடைந்தார் என்று கூறப்பட்டது. குறிப்பாக சமீபத்தில் நடந்த நியூயார்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் 3-வது சுற்றிலேயே அவர் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து செரீனா வில்லியம்ஸ் விரைவில் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால், “நான் இன்னும் ஓய்வு பெறவில்லை. நான் மீண்டும் டென்னிஸ் விளையாடுவேன். நான் ஓய்வு பற்றி இப்போது எதையும் நினைக்கவில்லை. கண்டிப்பாக நான் மீண்டும் எனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” என்றும் தெரிவித்துள்ளார்.