தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த கே என் லட்சுமணன் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த கே என் லக்ஷ்மணன் நேற்று உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 92. தமிழகத்தில் பாஜகவுக்கு இரண்டு முறை தலைவராக இருந்த அவர் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
அரசியல் பணிகளில் இருந்து விலகி சேலத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்த அவர் நேற்று மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் எல் முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.