அனைவரும் குரங்கு வைரஸ் நோய் வராமல் தடுக்க முன்னெசரிக்கை இருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட விலங்குகளை உண்பதன் மூலம் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் குரங்கு நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது.
பிரிட்டனைச் சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்களுக்கு குரங்கு அம்மைத் தொற்று இருப்பதாகக் கூறப்பட்டது. தற்போது இத்தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய் தொற்று எளிதில் ஏற்படாது எனினும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகினால் இந்த நோய் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது. இந்நோய் பாதிப்பு ஏற்பட்டால், காய்ச்சல், தலைவலி, முகுகுவலி, குளிர், சோர்வு, போன்ற அறிகுறிகள் இருக்கும். சுவாசப்பாதை, கண், மூக்கு, பிளவு ஏற்பட்ட தோல் ஆகியவற்றின் மூலம் இந்த நோய் ஏற்படும். குரங்கு அம்மை நோய் வருபவர்களுக்கு முதல் 3 நாட்கள் காய்ச்சல், தலைவலி, உடல்வலி இருக்கும், உடலில் தோன்றும் கொப்புளங்கள் மூலம் வரும் தண்ணீர் பட்டு வைரஸ் பரவி நோய்த்தொற்று அடுத்தவர்களுக்கும் பரவும், இது அவர்களின் எச்சில் முலமாகவும் இந்த வைரஸ் தொற்று பரவும் எனக் கூறப்படுகிறது. அதனால் முடிந்தவரை இந்த தொற்றால் பாதித்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.