சீனாவில் கொரோனாவை அடுத்து பரவும் புதிய வைரஸ் – பீதியில் மக்கள்!

Filed under: உலகம் |

2009 ஆம் ஆண்டு பரவிய எச்1 என்1 காய்ச்சல் உடைய மரபணுவை கொண்டுள்ள இந்த புதிய பன்றிக் காய்ச்சல் G4 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை செய்யப்பட்ட 30 ஆயிரத்துக்கும் பரிசோதனை மூலம் G4 மனிதர்களுக்கு பரவும் என சீனா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

பன்றிப் பண்ணைகளில் வேலை பார்ப்பவர்களில் 10.4 சதவீதம் பேருக்கு இதற்கு முன்பே பாதிப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த வைரஸ் மனித சுவாச மண்டலத்திற்குள் சென்று அங்கு பலமடங்கு பெருகும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே மக்களில் 4.4 சதவீதம் பேருக்கு G4 வைரஸ் பரவியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்தனர். இறந்த வைரஸ் பன்றிப் பண்ணைகள் போன்ற இடங்களில் வேலை பார்ப்பவர்களை கண்காணிக்கப்பட்டுள்ளது.