உக்ரைன் அதிபர் ரஷ்யா இரண்டு லட்சக் குழந்தைகளை கடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையே நடைபெற்று கொண்டிருக்கும் படையெடுப்பு 100 நாளாக நடந்துக் கொண்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இதனால் தங்கள் நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என ரஷ்யா தெரிவிக்கிறது. இப்போரினால் தானிய விளைச்சல் அதிகமுள்ள உக்ரைன் நாட்டிற்கு தானிய பஞ்சம் ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
இப்போரினால் இதுவரை 243 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 446 பேர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “மேலும், ரஷ்யா, உக்ரைனிலிருந்து, சுமார் 2 லட்சம் குழந்தைகளைக் கடத்தி உள்ளது. இக்குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவர்களை உக்ரைன் தண்டிக்கும். உக்ரைனை யாராலும் கைப்பற்ற முடியாது. நாங்கள் ஒருபோதும் சரணடைய மாட்டோம்” என்று கூறியுள்ளார்.