விழித்திரையில் கொரொனா!

Filed under: உலகம் |

கண்களின் விழித்திரையில் கொரொனா தன்னை பெருக்கிக் கொள்ள முடியும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 


சீனாவில் இருந்து கடந்த 2020ம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் பரவிய கொரொனா பெரும் இழப்களையும், பொருளாதார சரிவையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. 4வது அலை ஜூனில் வர வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்த நிலையில். மும்பையில் ஒருவருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் ஙீணி என்ற புதிய வகை கொரொனா வைரஸ் பத்து மடங்கு வேகாமாகப் பரவக் கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரொனா வைரஸ் கண்கள் மூலம் உடலுக்குள் நுழைய முடியும் என இரண்டு ஆண்டுகளாக மக்களுக்குத் தெரியும் நிலையில், தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகிறது. அதில், நுரையீரல் செல்களில் ஒட்டிக்கொண்டு தன்னை பலமடங்கும், அதேபோல் விழித்திரையிலும் வைரஸை பெருக்கிக்கொள்ளும் தன்மை கொண்டுள்ளது.

ஜெர்மனியில் மேக்ஸ் பங்க் இன்ஸ்டிட்யூட் சார் மோல்குலர் பயோ மெடிசின் மற்றும் வெஸ்ட்பால்டிக் வில்ஹெம் யுனிவர்சிட்டி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மனிதனின் கண் விழித்திரை செல்கள் போன்ற செல்கள் உருவாக்கி அதில் கொரொனா வைரஸை செலுத்தி அந்தச் செல்களில் தொற்றை உருவாக்கியுள்ளனர்.

அந்தச் செல்களில் கொரொனா வைரஸ் எண்ணிக்கையை அவர்கள் அளவிட்டுப் பார்த்த போது, அது அதிகரித்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர். எனவே விழித்திரையில் கொரொனா தன்னை பெருக்கிக் கொள்ள முடியும் என்ற உண்மை தெரியவந்துள்ளது.