தற்போது இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 10 லட்சத்து 57 ஆயிரத்து 806 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 35 ஆயிரத்து 747 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 6 லட்சத்து 42 ஆயிரத்து 588 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒரு கோடியே 88 லட்சத்து 32 ஆயிரத்து 970 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், தற்போது 5 லட்சத்து 45 ஆயிரத்து 318 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.