49ஒ – கவுண்டமணி நடிக்கும் புதிய படம்

Filed under: சினிமா |
சென்னையில் IMG_4725நேற்று துவங்கிய  மழை துளி ஒன்று விரைவில் பெரு மழையாக பரவ உள்ளது . இது பெரு  மழை ….சிரிப்பு மழை . Zero rules entertainment என்ற புதிய பட  நிறுவனத்தின் சார்பில் டாக்டர் சிவபாலன் தயாரிக்க, இயக்குனர் கௌதம் வாசு தேவ மேனனின் முன்னாள் இணை இயக்குனர் ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் உருவாகும் 49ஒ படப்பிடிப்பில் இந்த சிரிப்பு மழை பெய்தது .
கதையின் நாயகனாக நடிப்பவர் கவுண்ட மணி என்றால் சிரிப்புக்கு  பஞ்சமா என்ன!!!
படங்களை தேர்வு செய்து நடிக்கும் கவுண்டமணி , இந்த படத்தை தேர்ந்து எடுக்க படத்தின் தலைப்பான 49ஒ என்ற பரப்பான தலைப்பு மட்டுமின்றி , வித்தியாசமான கதை பின்னணியுமே காரணம் எனலாம்.
தேர்ந்து எடுத்தல் அல்லது வேண்டாம் என்று ஒதுக்குதல் என்பதே பின்னணி. இந்த படத்தில் கவுண்டமணி ஒரு விவசாயி ஆக நடிக்க அவருடன் மயில் சாமி, எம் எஸ் பாஸ்கர் , திருமுருகன் , சோமசுந்தரம் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ள இந்த படத்தின் இசை அமைப்பாளர் கே. பாடல்களை யுக பாரதி இயற்ற பாபு ஒளிபதிவு செய்ய , மாய கண்ணனின் கலை வண்ணத்தில் , படத்தொகுப்பை பரமேஷ் கிருஷ்ணா செய்கிறார்.