இந்தியாவில் மழை காலம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் ஒடிசாவில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது.
தற்போது ஒடிசாவில் பல பகுதிகளில் மின்னல் தாக்கியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். கியோன்ஜார் மாவட்டத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
பாலசோர் மாவட்டத்தில் இடியுடன் பெய்த கனமழையால் விபத்து உள்ளாகி பலர் காயம் அடைந்துள்ளனர். இதை போல் பஹாரிபூர் கிராமத்தில் நெல் வயலில் வேலைபார்த்து கொண்டிருந்த இரு விவசாயிகள் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
மேலும், உயிரிழந்தவர்கள் பற்றி விசாரணை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.