இலங்கை மக்கள் போராட்டம்!

Filed under: உலகம் |

இலங்கையில் பொருளாதார நெருக்கடி குறைந்தபாடில்லை. இதனால் அங்கு வாழும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பறிதவித்து வருகின்றனர்.

இதனால் இலங்கையில் சில மாதங்களாகப் பொருளாதார நெருக்கடி உள்ளதால், பிரதமர் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைதொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார். இலங்கைக்கு சீனா, இந்தியா உட்பட்ட நாடுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி செய்தன.
பொருளாதார நெருக்கடி மட்டுமல்லாது எரிபொருள் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. அதிபர் கோத்தப ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக போராட்டங்கள் மேலும் வலுத்துள்ளது. இப்போராட்டத்தில் எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் பங்கேற்றுள்ளன. இன்று காலை முதல் மக்கள் கொழும்புவில் கூடியுள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். அவர்களைக் கலைக்கும் விதமாக போலீசார் அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசினர். இதனால், அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.