மத்திய ஆப்பிரிக்காவில் இறுதிச் சடங்கின் போது நிலச்சரிவு போது 14 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் நடந்துள்ளது.
மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் நாட்டில் வயதான ஒருவர் காலமானதையடுத்து அவரை மண்ணில் புதைக்க இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டு மண் சரிந்தது. இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பலரும் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக் குழுவினர் தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணியை மேற்கொண்டனர். தற்போது வரை இந்த மண்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மண்சரிவில் சிக்கி உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்குமென்று அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.