டில்லியில் உள்ள திகார் சிறை கைதிகளுக்கு மதுபானம் விநியோகிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டில்லியில் உள்ள திகார் சிறையில் அறை எண் 7ல் உள்ள கைதிகளுக்கு மதுபானம் வழங்கப்படுவதாகவும் அதுமட்டுமின்றி அவர்களுக்கு கூடுதலாக சில வசதிகள் வழங்கப்படுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. சிறைத்துறை இயக்குனர் சஞ்சய் பணிவால் இதுகுறித்து விசாரணை செய்ய ஒரு குழு அமைத்துள்ளதாகவும் விசாரணை குழுவுக்கு அளவில் உள்ள ஒரு அதிகாரி தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு திகார் சிறை சென்று தீவிரமாக விசாரணை செய்து 10 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Related posts:
ஆறு வருடங்கள் முடிந்த அனைவருக்கும் வங்கிக்கணக்கு - பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் ட்வீட்!
நீட் தேர்வை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்து!
கோவிஷீல்டை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!
எஸ்.பி.பி விரைவில் குணமடைந்து வர நான் பிரார்த்திக்கிறேன் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ...



