டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி ஆர்பாட்டம் நடைபெற்றது.

Filed under: தமிழகம் |

இலுப்பூர், அன்னவாசல் பேரூராட்சியில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி ஆர்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி இலுப்பூர், அன்னவாசல் பேரூராட்சியில் விடியா திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு, போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்து

கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கினங்க மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்

முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி முன்னிலையிலும் ஒன்றிய செயலாளர்கள் சுப்பையா, முத்தமிழ்செல்வன், முத்துக்குமார், பழனியாண்டி, நாகராஜ், மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, நகர செயலாளர்கள் சத்யா மணிகண்டன் , அப்துல் அலி ஆகியோர் ஏற்பாட்டிலும் நடைபெற்றது

பின்னர் விடியா திமுக அரசை எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுப்பட்டது

இதில் 1000க்கு மேற்பட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.