“எல் ஐ சி” என்ற திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “லவ் டுடே” புகழ் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். “லியோ” படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார். படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை ஈஷா மையத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த ஷூட்டிங்கை ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் தொடங்கினார் விக்னேஷ் சிவன். படத்தில் கதாநாயகியாக கிரீத்தி ஷெட்டி நடிக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
முதலில் பிரதீப் சம்மந்தமான காட்சிகளை படமாக்கிய விக்னேஷ் சிவன் அதன் பின் எஸ்.ஜே.சூர்யா நடித்த காட்சிகளைப் படமாக்கினார். இப்போது தமிழகத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்து முடித்துள்ள விக்னேஷ் சிவன் அடுத்து சிங்கப்பூர் சென்று சில முக்கியக் காட்சிகளை படமாக்கி வந்தார். இப்படத்துக்கு “எல்.ஐ.சி” என தங்கள் நிறுவனப் பெயரை வைக்கக் கூடாது என லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதனால் இப்போது தலைப்பு மாற உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்துக்கு “எல்.ஐ.கே” என்று மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.