புது டெல்லி,மே 04
ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாராவில் வீர மரணமடைந்த துணிவுமிக்க சிப்பாய்களுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
ஹந்த்வாராவில் வீர மரணமடைந்த துணிவுமிக்க சிப்பாய்களுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் அஞ்சலிகள். அவர்களின் வீரமும், தியாகமும் என்றும் மறக்கப்படாது. நாட்டுக்காக உச்சபட்ச அர்ப்பணிப்போடு சேவை புரிந்த அவர்கள், மக்களை காப்பாற்ற ஓய்வின்றி உழைத்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல்கள், என்று பிரதமர் கூறினார்.