இந்தியாவில் கொரோனாவால் பலியாகும் விகிதம் 2.82 சதவீதம் தான் உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய லாவ் அகர்வால் கூறியது: உலக அளவில் இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் 2.82 % குறைவாக உள்ளது. இந்தியாவின் கொரோனா எண்ணிக்கையை மற்ற நாடுகளுடன் ஒப்பிடக்கூடாது. இந்தியாவின் மக்கள்தொகையை நினைவில் கொள்ள வேண்டும்.
நம் இந்தியாவை போல மக்கள் தொகை அதிகம் கொண்ட 14 நாடுகளில் நம்மை விட 22.5 மடங்கு கொரோனா பாதிப்பு அதிகமும்; 55.2 மடங்கு உயிரிழப்பவர் அதிகமாக கொண்டுள்ளது.
மேலும், இந்தியாவில் கொரோனாவால் குணம் அடைபவர்கள் எண்ணிக்கை 95, 527 ஆக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 11.42 சதவீதமாக இருந்த குணம் அடைபவர்கள் விகிதம் தற்போது 48.07% அதிகமாக உள்ளது.
இவ்வாறு லாவ் அகர்வால் கூறியுள்ளார்.