இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 8 ஆயிரத்து 855 கொரோனா தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
இதை பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) இன்று வெளியிட்ட ட்விட்டரில் பதிவில்: இந்தியா முழுவதும் நேற்று 4 லட்சத்து 8 ஆயிரத்து 855 பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது இதுவரை மொத்தமாக ஒரு கோடியே 77 லட்சத்து 43 ஆயிரத்து 740 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனையை மேலும் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. சென்ற ஒரு வாரத்திற்க்கும் மேலாக ஒரு நாளில் 3.50 லட்சத்திற்கும் அதிகமாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.