2100ஆம் ஆண்டுக்குள் 38 செ.மீ. அளவு கடல் மட்டம் அதிகரிக்கும் – நாசா ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Filed under: உலகம் |

2100ஆம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டிமீட்டர் அளவுக்கு அதிகரிக்கும் என நாசா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதை பற்றி நாசா வெளியிட்ட அறிக்கையில்; பசுமை இல்லா வாயுகள் வெளியேறுவது தொடர்ந்து வந்தால் கிரின்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகுவது உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2100ஆம் வருடத்துக்குள் 38 சென்டிமீட்டர் அளவுக்கு கடல் மட்டம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், கிரீன்லாந்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் 8 முதல் 27 சென்டிமீட்டர் அளவு அதிகரிக்கும் எனவும் அண்டார்டிகாவில் 3 முதல் 28 சென்டி மீட்டர் அளவு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.