போலி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக பண மோசடிகளில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி திகழ்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வங்கியை PNB 2.0 என அழைக்கப்படுகிறது.
ATM-களில் இருந்து பணம் எடுப்பதற்கான விதிகளை பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மாற்றப்போகிறது.
வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் , பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் EMV அல்லாத ATM இயந்திரங்களிலிருந்து பணத்தை எடுக்க முடியாது. அதாவது, EMV அல்லாத இயந்திரங்களிலிருந்து நீங்கள் தற்காலிக சேமிப்பை அகற்ற முடியாது.
அதேபோல் பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது. அப்படி அதிக பணம் எடுப்பவர்கள் OTP பாஸ்வோர்ட் பயன்படுத்த வேண்டும். வங்கியிடம் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP பாஸ்வோர்ட் அனுப்பப்படும். அதை பதிவு செய்தால் மட்டுமே பணம் எடுக்க முடியும். எனவே, ஏடிஎம் இயந்திரத்துக்கு பணம் எடுக்க செல்பவர்கள் கையில் மொபைலை எடுத்துச்செல்ல வேண்டியது மிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.