விவசாயி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் (55) கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கு, சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
கொலை வழக்காக பதிவு செய்ய குடும்பத்தினர் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில்,
லோயர்கேம்ப் பிரிவு வனவர் S.திருமுருகன், மற்றும் கப்புவாமடை பீட் வனக்காவலர் ஜார்ஜ் என்ற பென்னிகுட்டி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சிவபிரசாத் கொலை வழக்கு(302)பதிவு செய்தார்.