இந்த சிகிக்சையால் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டேன் – விஷால்!

Filed under: சினிமா |

ஆயுர்வேத சிகிச்சையால் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டேன் என, நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷால். இவர் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் சங்கத்தின் முக்கியமான பதவியில் இருந்து வருகிறார். தற்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணம் அடைந்துள்ளார்‌‌.

இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து நடிகர் விஷாலுக்கும் அவருடைய மேலாளருக்கும் அறிகுறிகள் இருந்துள்ளது. அவர்கள் அனைவர்க்கும் ஆயுர்வேத சிகிச்சை கொடுக்கப்பட்டதால் தற்போது பூரண குணமடைந்து விட்டேன் குணம் அடைந்துள்ளார்.

இதனைப் பற்றி விஷால் ட்விட்டர் பக்கத்தில் கூறியது: கொரோனா பரிசோதனை செய்ததில் என்னுடைய தந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியது. அவருக்கு உதவியாக இருந்த எனக்கும் காய்ச்சல், சளி, இருமல், ஆகிய பிரச்சனைகள் இருந்தது. என்னுடைய மேலாளரும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின் எங்கள் அனைவருக்கும் ஆயுர்வேத சிகிச்சை கொடுக்கப்பட்டது. தற்போது கொரோனாவில் இருந்து அனைவரும் நலமாக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.