கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயுதப்படை காவலர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பலியாகியுள்ளார்.

மதுரையை சேர்ந்த ஆயுதப்படை காவலர் நாகராஜ். இவர் சென்னையிலுள்ள வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த மூன்றாம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். அந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரை சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை நாகராஜ் சிகிச்சை பலனில்லாமல் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் காவல்துறை காவலர்களை பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
Related posts:
கஞ்சா ஒழிப்பு நல்லத் தொடக்கம்: ஆனால், போதுமானதல்ல... தீவிரம் காட்ட வேண்டும் - இராமதாசு !
பரந்தூர் விமான நிலையம் குறித்து மத்திய அமைச்சர் பேட்டி!
ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் - டிடிவி தினகரன் !
சென்னை விமான நிலையத்தில் ரூ.22.31 லட்சம் மதிப்பில் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது!