ரக்ஷாபந்தன் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது: “ரக்ஷாபந்தன் என்ற புனித தருணத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நமது சமூகத்தில் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான அன்பு மற்றும் பாசத்தின் வலுவான பிணைப்பை ரக்ஷாபந்தன் பண்டிகை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஒரு சகோதரர் மற்றும் ஒரு சகோதரிக்கு இடையேயான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்பு, பரஸ்பர மரியாதை மற்றும் கருணையில் அமைந்துள்ள இந்த தனித்துவம் வாய்ந்த பந்தத்தை ரக்ஷாபந்தன் கௌரவிக்கிறது. நமது சமூகத்தில் பெண்களுக்கு பாரம்பரியமாக அளிக்கப்படும் உயர்ந்த நிலையையும் இந்த திருநாள் நமக்கு நினைவூட்டுகிறது. இந்தத் தருணத்தில் நம் நாட்டில் உள்ள பெண்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், அவர்களுக்கு மரியாதை செலுத்தவும் நம்மை நாமே மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோம். ரக்ஷாபந்தன் என்ற புனித திருநாளன்று நம் நாட்டு குடிமக்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
Continue reading …தமிழ்நாட்டில் கோவிட்-19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 23.08.2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தில் மாவட்ட வாரியாக நோய்த்தொற்றுப் பரவலின் தன்மை, அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இன்று (21.08.2021) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. […]
Continue reading …திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் அடுத்தடுத்து குணசேகரன், வெங்கடேசன், சிவகாமி ஆகியோர் வீடுகளில் கொள்ளை அடித்த 37 சவரன் தங்க நகை மீட்பு. திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த மனோஜ் மற்றும் சரத் ஆகியோர் கைது செய்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் நடவடிக்கை.
Continue reading …தூத்துக்குடியில் சீல் வைக்கப்பட்ட குடோனில் இருந்து சட்டவிரோதமாக தாது மணல் எடுத்துச் சென்றது தொடர்பாக, விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடல் மண்ணில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட தாது மணலை பதுக்கி வைக்கவோ, ஏற்றுமதி செய்யவோ தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கிடையில், கடந்த 2017-ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வி.வி.மினரல், பி.எம்.சி., ஐ.எம்.சி. உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான கிடங்குகளில் சோதனை மேற்கொண்டதில், கார்னைட், இல்மனைட், ஜிர்கான் மற்றும் ரூட்டைல் ஆகிய தாது […]
Continue reading …கேரள மக்களின் அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரும் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மொழியால் இணைந்து கொண்டாடும் இத்திருநாளின் மூலம் சகோதரத்துவமும், ஒற்றுமையும் தழைத்தோங்கட்டும். ‘மன்னாதி மன்னனாக இருந்தாலும், கடைகோடி குடிமகனாக இருந்தாலும் அகங்காரத்தால் எதையுமே சாதிக்க முடியாது; அன்பும் பணிவும் மட்டுமே அனைவரின் உள்ளங்களிலும் இடம்பிடிக்கும்’ என்பதை மகாபலி சக்கரவர்த்தியின் வழியாக இந்த உலகத்திற்குச் சொல்லும் ஓணம், அனைவரின் வாழ்விலும் […]
Continue reading …மக்களை நேசித்த மன்னன் மகாபலி மக்களைச் சந்திக்க வரும் திருவோணம் திருநாளைக் கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள மலையாள மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாமணனால் பாதாளத்தில் தள்ளப்பட்ட மகாபலி மன்னன் ஆண்டுக்கு ஒருமுறை வெளியே வந்து தமது மக்களைச் சந்திக்கச் செல்லும் நிகழ்வு தான் திருவோணம் திருநாளாக கொண்டாடப்படுகிறது. மன்னன் மகாபலியின் வருகை மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்வாகும். இந்த நாள் மகாபலி மன்னனை மட்டும் வரவேற்பதற்கான நாள் அல்ல… வாழ்க்கையில் நாம் அனுபவித்து […]
Continue reading …மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், தமிழ் வரலாற்று ஆவணங்கள் அனைத்தையும் 6 மாதத்திற்குள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. 1966 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் அளவீட்டு துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் மொழிவாரியாகவும், அகரவரிசைப்படியும், எண்ணிக்கையின்படியும் வகைப்படுத்தியதில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் கல்வெட்டுகள் தான் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, 1966 ஆம் ஆண்டில், தமிழில் 20000 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. கன்னடம் 10,600, சமஸ்கிருதம் 7,500, தெலுங்கு […]
Continue reading …தேசிய அளவிலான களரிப் பயட்டு போட்டிகளில் பங்கேற்ற ஈஷா மாணவர்கள் ஒரு தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்திய பாரம்பரிய கலைகளில் களரிப் பயட்டு ஒரு முக்கிய கலையாகும். சாகசம் நிறைந்த இக்கலையை ஊக்குவிப்பதற்காக இந்திய களரிப் பயட்டு கூட்டமைப்பு ஆண்டுதோறும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி, 2020-21-ம் ஆண்டிற்கான போட்டிகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை […]
Continue reading …தமிழ்நாட்டில் மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உயர்த்துவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் கூறியிருக்கிறார். கொரோனா பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்த நினைப்பது நியாயமற்றது. சென்னையில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நிதித்துறை செயலாளர், தமிழ்நாடு அரசின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறியுள்ளார். நிலைமையை சமாளிக்க […]
Continue reading …பாஜகவின் ஆட்சி மனிதகுலத்திற்கே எதிரானது! – எரிகாற்று உருளை விலை உயர்வுக்கு சீமான் கடும் கண்டனம் கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியிருக்கும் அசாதாரணச்சூழலால் நாடெங்கும் வாழும் மக்கள் பொருளாதார நலிவுக்குள்ளாகி நிர்கதியற்று நிற்கையில், அவர்களது வாழ்வாதார இருப்புக்கு எதுவொன்றையும் செய்யாத மத்தியில் ஆளும் பாஜக அரசு, எரிகாற்று உருளையின் விலையை 25 ரூபாய் ஏற்றி, 875 ரூபாயாக உயர்த்தியிருப்பது மக்கள் மனங்களில் பெரும் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் வரலாறு காணாத வகையிலான விலையேற்றத்தாலும், […]
Continue reading …