
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 36 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 1,684 பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களையும், 15 காம்பாக்டர் வாகனங்களையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியின்போது உயிரிழந்த 195 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார். சென்னை மாநகராட்சியின் தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளை […]
Continue reading …
காமெடி நடிகையான வித்யுலேகா ராமன், கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். பப்ளியான லுக்கில் அவரது காமெடி பலரையும் வெகுவாக ஈர்த்தது. பின்னர் தனது உடல் எடையை குறைத்து கட்டான கவர்ச்சியில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலேகா ஓரளவிற்கு உடலை குறைத்து அடிக்கடி கவச்சியான புகைப்படத்தை தனது […]
Continue reading …
தூய்மையான காற்று மற்றும் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வை ஏற்படுத்துவதற்காக நாட்டு மக்கள் உள்ளிட்ட அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பங்களிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் புபேந்தர் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற நீல வானத்திற்கான தூய்மையான காற்றின் சர்வதேச தினத்தின் இரண்டாம் ஆண்டைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் காற்றின் தரத்தை முழுவதும் மேம்படுத்த பிரதமர் இலக்கு நிர்ணயித்துள்ளதை சுட்டிக்காட்டி, நாடு முழுவதும் காற்றின் தரத்தை மேம்படுத்த […]
Continue reading …
கண்தானம் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான நம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும் என்றும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும், மாநிலங்களின் பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் மற்றும் ஆளுமைகளை ஈடுபடுத்தி, உள்ளூர் மொழிகளில், பரவலான மல்டிமீடியா பிரச்சாரங்கள் தொடங்கப்பட வேண்டும் என்றும் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார். 36-வது தேசிய கண் தான இருவார விழா கொண்டாட்டங்களில் உரையாற்றிய அவர், நன்கொடையாளர் திசுக்களின் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே உள்ள பெரும் இடைவெளி பற்றிக் குறிப்பிட்டார். […]
Continue reading …
2021 ஆண்டின் 13 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. அந்த வகையில், செப்டம்பர் 9, 2021 அன்று நடைபெறும் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் வழியாக தலைமையேற்று நடத்துகிறார். இந்த மாநாட்டில் பிரேசில் அதிபர் திரு ஜெயிர் போல்சொனாரோ, ரஷிய அதிபர் மேதகு விளாடிமிர் புதின், சீன அதிபர் மேதகு ஜின்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் மேதகு சிரில் ரமாபோசா ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், திரு. அஜித் தோவல், புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர் திரு. மார்கோஸ் ட்ராய்ஜோ, பிரிக்ஸ் வணிக கவுன்சிலின் சார்பு தலைவர் திரு. ஓங்கார் […]
Continue reading …
ரோஷ் ஹஷானாவை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் மற்றும் இஸ்ரேலின் தோழமையான மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியதாவது: “இன்று ரோஷ் ஹஷனாவைக் கொண்டாடும் இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னடுக்கும் இஸ்ரேலின் தோழமையான மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.“
Continue reading …
விநாயகர் சதுர்த்திக்கு பயன்படுத்தும் விநாயகர் சிலைகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை மூலப் பொருள்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: விநாயகர் இந்தியாவில் இருக்கும் கடவுள்களில் மிகவும் அழகானவர். அவருடைய அன்பான தன்மையாலும் குணத்தாலும் அவர் உலகம் முழுவதும் வணங்கப்படுகிறார். இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி ஒரு முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த பண்டிகையின் […]
Continue reading …
சென்னை தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு பணியின் போது இறந்த உதவி ஆய்வாளர் உடலுக்கு புளியந்தோப்பு குடியிருப்பில் டி.ஜி.பி. முனைவர் சைலேந்திர பாபு, இ.கா.ப., மலர் அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உயிரிழந்த எஸ்.ஐ. கோபிநாத் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதி வழங்கியிருந்தார்.
Continue reading …
ஒன்றிய நல்வாழ்வுத்துறைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும் முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பெயரனுமான கேஷவ் தேசிராஜு இன்று காலை மாரடைப்பால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அரசுப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய அவர் பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகள் மற்றும் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டோர் நலனில் தனித்த அக்கறை கொண்டிருந்த மனிதநேயப் பண்பாளராகவும் அவர் திகழ்ந்தார். தமது பாட்டனாரின் பிறந்தநாளிலேயே மறைவெய்தியுள்ள […]
Continue reading …
ஐஸ்வர்யா ராஜேஷின் 25 வது படமான ‘பூமிகா’ திரைப்படம் ஆகஸ்ட் 23.08.2021 அன்று நெற்ஃபிளிக்சு (Netflix) மற்றும் விஜய் தொலைக்காட்சியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தை ரதீந்திரன் ஆர் பிரசாத் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இத்தாலிய ஒளிப்பதிவாளர் ராபர்டோ ஜஸாரா ஒளிப்பதிவு, பிருத்வி சந்திரசேகரின் இசை மற்றும் ஆனந்த் ஜெரால்டின் எடிட்டிங் ஆகியவை அடங்கும் மற்றும் இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தார்த், […]
Continue reading …