Home » Entries posted by admin (Page 13)
Entries posted by admin

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் – தமிழக அரசுக்கு சத்குரு பாராட்டு !

Comments Off on வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் – தமிழக அரசுக்கு சத்குரு பாராட்டு !

“தமிழ்நாட்டில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்” என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பிற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில். “ வரலாற்று சிறப்புமிக்க வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கும் தமிழக அரசுக்கு பாராட்டுகள். மிக தொன்மையான வேளாண் பாரம்பரியம் கொண்ட, இயற்கை விவசாயத்தில் முன்னோடியான தமிழகம் இதன்மூலம் மகத்தான பொருளாதார, சுற்றுச்சூழல், ஆரோக்கிய பலன்களை நிச்சயம் பெறும். வாழ்த்துகள் @mkstalin ” என்று […]

Continue reading …

இல்லங்களுக்கு இனிக்கும் குடிநீர்: ஒதிஷாவில் சாத்தியமான கனவு தமிழ்நாட்டில் நனவாவது எப்போது?

Comments Off on இல்லங்களுக்கு இனிக்கும் குடிநீர்: ஒதிஷாவில் சாத்தியமான கனவு தமிழ்நாட்டில் நனவாவது எப்போது?

ஒதிஷா மாநிலத்தின் புனித நகரமான பூரியில் குழாய்கள் மூலம் ஐ.எஸ்.ஓ 10500 தரம் கொண்ட மிகவும் தூய்மையான குடிநீர் வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வீட்டு குடிநீர் குழாய்களிலும், பொது குடிநீர் குழாய்களிலும் புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுவதை விட சுவையான, தரமான குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது நமக்கு ஏக்கத்தை ஏற்படுத்தும் செய்தி தான். இதற்குக் காரணமான நவீன் பட்நாயக் தலைமையிலான ஒதிஷா அரசு பாராட்டுகளுக்குரியது. உலகில் லண்டன், நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் தான் […]

Continue reading …

திண்டிவனம் ராமமூர்த்தி மறைவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் !

Comments Off on திண்டிவனம் ராமமூர்த்தி மறைவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் !

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் செய்தி : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், சட்டப்பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான திரு. திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதுபெரும் காங்கிரஸ் தலைவராக, தேசிய நீரோட்டத்தில் கலந்து- அக்கட்சியின் தேசிய அரசியல் தலைவர்கள் அனைவராலும் அறியப்பட்ட திரு. திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள், மாநிலங்களவை உறுப்பினராகவும் […]

Continue reading …

மலேசியாவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை விரைந்து மீட்டு வர வேண்டும் -சீமான் வலியுறுத்தல்!

Comments Off on மலேசியாவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை விரைந்து மீட்டு வர வேண்டும் -சீமான் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டிலிருந்து வேலைவாய்ப்புக்காக மலேசியா சென்ற தமிழர்கள் பலரை, அவர்கள் பணிபுரியச் சென்ற நிறுவனங்கள் தகுந்த பணியும், உரிய ஊதியமும் தராது ஏமாற்றியதோடு, கடவுச்சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் பறித்து வைத்துக்கொண்டதால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வரும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் தங்களது சொந்த செலவில்தான் நாடு திரும்ப வேண்டும் எனக்கூறி, சிறிதும் மனச்சான்றின்றி இந்தியத்தூதரகம் முற்றுமுழுதாகக் கைவிரித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. கொரோனா தொற்றுப்பரவலினால் தற்போது இடப்பட்டுள்ள உலகளாவியக் கட்டுப்பாடுகள் […]

Continue reading …

கண்ணீர் வேண்டாம்…பெருமிதம் கொள்வோம்-அன்புமணிஇராமதாஸ்!

Comments Off on கண்ணீர் வேண்டாம்…பெருமிதம் கொள்வோம்-அன்புமணிஇராமதாஸ்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் மகளிர் ஹாக்கி பிரிவில் இன்று நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியிடம் தோல்வி அடைந்ததை எண்ணி இந்திய வீராங்கனைகள் கண்ணீர் விட்டு கலங்கியது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்கள் போட்டியில் தோற்றிருக்கலாம் ஆனால் இந்தியர்களின் இதயங்களை வென்றிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் கண்ணீர் விடவோ, கவலைப் படவோ தேவையில்லை. மாறாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததற்காக இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் பெருமிதம் கொள்ளவேண்டும். ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளின் […]

Continue reading …

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் – வேல்முருகன் எம் எல் ஏ!

Comments Off on பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் – வேல்முருகன் எம் எல் ஏ!

உச்சநீதி மன்றத்தின் புதிய தீர்ப்பின் அடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. கடந்த 03.08.2021 அன்று, அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி  ஒருவரின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் முக்கியமான தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அதாவது,அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 கீழ் மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க முழு அதிகாரம் கொண்டிருக்கிறது.  ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு இங்கு செயல்பட […]

Continue reading …

களத்தில் குதித்தார் திருப்பத்தூர் எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி!

Comments Off on களத்தில் குதித்தார் திருப்பத்தூர் எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி!

நெற்றிக்கண் செய்தி எதிரொலி ! களத்தில் குதித்த திருப்பத்தூர் மாவட்ட புதிய எஸ்.பி.சக்ரவர்த்தி கடந்த 2.7.2021 நமது நவீன நெற்றிக்கண் வார இதழில், ” திருப்பத்தூர் மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்திக்கு காத்திருக்கும் சவால்கள் ” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆறாக ஓடும் கள்ள சாராயம், மணல் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல் போன்றவைகளை புதிய எஸ்.பி.யான சிபிசக்கரவர்த்தி தடுத்து நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டு இருந்தோம். […]

Continue reading …

வழிபாட்டு தளங்களை திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் சங்கத்தினர் நன்றி!

Comments Off on வழிபாட்டு தளங்களை திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் சங்கத்தினர் நன்றி!

தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களையும் உரிய நெறிமுறைகளுடன் திறக்கக்கோரி தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன் சங்கத்தினர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையில் கூறப்பட்டிருந்த விபரமாவது. கொரானா குறைந்தும் நாகப்பட்டினம் மாவட்டம் வகைப்பாட்டில் மூன்றாம் நிலையில் நிலவுவதால் இங்கு வழிபாட்டு தலங்கள் திறப்பதில் சிக்கல் நிலவுகிறது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதித்து இருப்பதால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரானா தொற்று குறைந்து […]

Continue reading …

எடியூரப்பாவின் அழைப்பை நம்பி பேச்சு நடத்தக்கூடாது !

Comments Off on எடியூரப்பாவின் அழைப்பை நம்பி பேச்சு நடத்தக்கூடாது !

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கக் கூடாது என்றும், இது தொடர்பாக இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அழைப்பு விடுத்திருக்கிறார். தமிழகத்தின் நலனுக்கு எதிராக விரிக்கப்பட்டுள்ள கர்நாடக அரசின் பேச்சு வார்த்தை என்ற வஞ்சக வலையில் தமிழக அரசு சிக்கிக் கொள்ளக்கூடாது. மேகேதாட்டு அணை திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும் என்ற கர்நாடக […]

Continue reading …

நாகூரில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி புதிய கட்டிட திறப்பு!

Comments Off on நாகூரில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி புதிய கட்டிட திறப்பு!

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் முதன் முதலாக திறக்கப்பட்ட வங்கி இந்தியன் ஒவர்சீஸ் வங்கியாகும். அக்டோபர் 1977ல் நாகூர் தெருப்பள்ளி தெருவில் திறக்கப்பட்டு சிறப்பாக 44 வருடங்களாக இயங்கிவந்தது. கட்டிட மேம்பாடு தேவையின் காரணமாக இந்தியன் ஒவர்சீஸ் வங்கி புதிதான கட்டிடத்தில் நாகூர் மெயின் ரோடு அரசு மருத்துவமனை எதிரே இன்று திறக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் தேவைக்கினங்க பல்வேறு புதிய வசதிகள் இங்கு ஏற்படுத்தபட்டுள்ளன. புதிய வங்கி அலுவலகத்தை நாகூர் தர்கா பரம்பரை ஆதீனமும் முன்னாள் தர்கா பிரசிடன்டுமான செய்யது […]

Continue reading …