Home » Entries posted by admin (Page 25)
Entries posted by admin

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகம்!

Comments Off on புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகம்!
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகம்!

புது டெல்லி,மே 05 கொரரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பொது ஊரடங்கு தொடர்வதால், மத்திய அரசின் பல்வேறு கட்டுமான நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த ஏராளமான தொழிலாளர்கள் பல இடங்களில் தவித்து வருகின்றனர். அவர்களது சிரமத்தைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மத்திய துணைத் தலைமை தொழிலாளர் நல ஆணையர் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளார். தமிழகத்தில், சென்னை முதல் கன்னியாகுமரி வரை, 59 பணியிடங்களில் வேலை பார்த்து வந்த மொத்தம் 20,054 தொழிலாளர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் அனைவரும் வேறு  மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். […]

Continue reading …

டிக் டாக் மூலம் கைதான சாராய வாலிபர்!

Comments Off on டிக் டாக் மூலம் கைதான சாராய வாலிபர்!
டிக் டாக் மூலம் கைதான சாராய வாலிபர்!

நாகை, மே 5மூர்த்தி தமிழ்நாட்டில் ஊரடங்கு சட்டத்தில் மதுபான கடைகள் மூடிய நிலையில் மது பிரியர்கள் ஒரு குவாட்டர் 300க்கு கூட கிடைக்காத நிலையில் பரிதவித்து வருகின்றனர். அருகில் உள்ள காரைக்கால் பகுதியில் இருந்து கடத்தி வர முயற்சித்தாலும் அந்த அரசாங்கம் கேமிரா மூலம் கண்காணித்து வருவதால் கடையில் உரிமையாளர்களின் உரிமை ரத்தாகி விடும் என்ற பயத்தில் உள்ளார்கள். நாகப்பட்டினம் அருகே பொய்யூர் கிராமத்தில் பூஞ்சோலை என்கிற தமிழ்செல்வன் தன் வீட்டில் எரிசாராயம் காய்ச்சுகின்ற தொழிலை ஆரம்பித்துள்ளார். […]

Continue reading …

மே 7 முதல் டாஸ்மாக் – தமிழக அரசு அறிவிப்பு!

Comments Off on மே 7 முதல் டாஸ்மாக் – தமிழக அரசு அறிவிப்பு!
மே 7 முதல் டாஸ்மாக் – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை,மே 4  கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அவ்வப்போது வழங்கிவருகிறது. மத்திய அரசின் ஊரடங்குஉத்தரவு 4.5.2020 முதல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானக்கடைகள், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதி அளித்துள்ளது. எனினும் மதுபானக்கூடங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் மதுபானக்கடைகளை திறக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள ஆந்திரா மற்றும் […]

Continue reading …

சர்தார் பட்டேல் விருது: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

Comments Off on சர்தார் பட்டேல் விருது: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
சர்தார் பட்டேல் விருது: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

புது டெல்லி,மே 04 தேசிய  ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பங்களிப்பவர்களுக்கான மிக உயரிய சிவில் விருதாக சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருதை, சர்தார் வல்லபாய் படேலின் பெயரில் மத்திய அரசு நிறுவியது. இந்தத் துறையில் எழுச்சியூட்டும் வகையில் குறிப்பிடத்தகுந்த பங்களித்திருக்கும் தனி நபர்கள், நிறுவனங்கள் அல்லது அமைப்புகளை அங்கீகரித்து, வலிமையான, ஒற்றுமையான இந்தியாவின் மதிப்பை வலுப்படுத்துவது இந்த விருதின் நோக்கமாகும். இந்த விருதுக்கான நியமனங்கள்/பரிந்துரைகளை வரவேற்று 20 செப்டம்பர், 2019 அன்று ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டது. https://nationalunityawards.mha.gov.in என்னும் […]

Continue reading …

ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்!

Comments Off on ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்!
ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்!

சென்னை,மே 4 தமிழகம், இந்தியாவிலேயே அதிக அளவில் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக திகழ்கிறது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் சாலை உட்கட்டமைப்பானது இன்றியமையாததாகும். சாலை உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க பல்வேறு முகமைகளோடு ஆலோசித்து புதுமையான வழிமுறைகளை மாண்புமிகு அம்மா அவர்கள் கொண்டு வந்த சிறந்த திட்டங்களில் ஒன்று, செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறை – Performance Based Maintenance Contract (PBMC) ஆகும். இதில், ஒப்பந்ததாரர் மூலம் ஒரு மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சாலைகள் மற்றும் அதில் உள்ள […]

Continue reading …

வீர மரணமடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி!

Comments Off on வீர மரணமடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி!
வீர மரணமடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி!

புது டெல்லி,மே 04 ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாராவில் வீர மரணமடைந்த துணிவுமிக்க சிப்பாய்களுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். ஹந்த்வாராவில் வீர மரணமடைந்த துணிவுமிக்க சிப்பாய்களுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் அஞ்சலிகள். அவர்களின் வீரமும், தியாகமும் என்றும் மறக்கப்படாது. நாட்டுக்காக உச்சபட்ச அர்ப்பணிப்போடு சேவை புரிந்த அவர்கள், மக்களை காப்பாற்ற ஓய்வின்றி உழைத்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல்கள், என்று பிரதமர் கூறினார்.

Continue reading …

பழங்குடியினருக்கு உதவ மத்திய அரசு அறிவுரை!

Comments Off on பழங்குடியினருக்கு உதவ மத்திய அரசு அறிவுரை!
பழங்குடியினருக்கு உதவ மத்திய அரசு அறிவுரை!

 புது டெல்லி,மே 03 கோவிட்-19 பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள மோசமான சூழலில் பழங்குடியினருக்கு உதவுவதற்கும், சிறு வன உற்பத்திப் பொருள்களைச் சேகரிக்க இது உச்சபட்ச காலம் என்பதைக் கருத்தில் கொண்டும், அவற்றை விரைந்து கொள்முதல் செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சிறு வன உற்பத்திப் பொருள்களைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளை மாநிலங்கள் மேற்கொண்டுள்ளன. 10 மாநிலங்களில் இந்த நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. 2020-21 நிதியாண்டுக்கான கொள்முதல் இதுவரை ரூ.20.30 கோடிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. […]

Continue reading …

பேரழிவு ஏற்படும்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளை தளர்த்தக் கூடாது – அன்புமணி எச்சரிக்கை!

Comments Off on பேரழிவு ஏற்படும்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளை தளர்த்தக் கூடாது – அன்புமணி எச்சரிக்கை!
பேரழிவு ஏற்படும்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளை தளர்த்தக் கூடாது – அன்புமணி எச்சரிக்கை!

சென்னை, மே 3 இந்தியாவில் பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்துவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு  விதிமுறைகளை தளர்த்த மத்திய அரசு  திட்டமிட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக இந்தியா உள்ளிட்ட ஒட்டுமொத்த உலகமும் இனிவரும் காலங்களில் அடிக்கடி பேரழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ள நிலையில், இந்த திட்டம் மிகவும் ஆபத்தானது. ஒரு நாட்டின் வளர்ச்சி ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும்; பொருளாதாரத்தை வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு சுற்றுச்சூழலை சீரழித்து விடக் கூடாது என்பதற்காகத் தான் தொழில்திட்டங்களுக்கும், […]

Continue reading …

வேளாண் பிரச்சினைகள்: பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

Comments Off on வேளாண் பிரச்சினைகள்: பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
வேளாண் பிரச்சினைகள்: பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

புது டெல்லி,மே 02 வேளாண் பிரிவில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார். வேளாண் பொருள்களை சந்தைப்படுத்துதலில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள், உபரிப் பொருள்களைச் சந்தைப்படுத்துவதை மேலாண்மை செய்தல், நிறுவனக்கடன்கள் விவசாயிகளுக்குக் கிடைத்தல் மற்றும் தேவையான சட்டப்பூர்வ உரிமையுடன் பல்வேறு தடைகளில் இருந்து வேளாண் பிரிவை விடுவித்தல் போன்ற பிரச்சினைகளுக்கு இந்தக் கூட்டத்தில் முக்கியத்துவம் தரப்பட்டது. தற்போதைய சந்தைப்படுத்துதலில் உள்ள சூழல்சார் அமைப்பில் மேற்கொள்ள வேண்டிய செயல்உத்தி சார்ந்த […]

Continue reading …

டுபாக்கூர் சித்த மருத்துவர் தணிகாசலம் ஒரு மனநோயாளியா!

Comments Off on டுபாக்கூர் சித்த மருத்துவர் தணிகாசலம் ஒரு மனநோயாளியா!
டுபாக்கூர் சித்த மருத்துவர் தணிகாசலம் ஒரு மனநோயாளியா!

சென்னை, மே 2 நாம் ஏற்கனவே டாக்டர் என்று தன்னை தானே சொல்லிக்கொள்ளும் தணிகாசலம் ஒரு டுபாக்கூர் டாக்டர் என்பதை ஆதாரபூர்வமாக சொல்லியிருந்தோம். தணிகாசலம் மன நிலை பாதிக்கப்பட்டு விட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது காரணம் இதுதான், நான் கொரோனாவை குணப்படுத்துவேன் என சொல்லி சமீபகாலமாக முகநூலில் பேசி அதை தனது கைதடியில் மூலம் யூ டியுபியில் பரப்பி வருகிறார். அவர் ஒரு போலி டாக்டர், அவர் ஒரு மனநோயாளி என்ற விபரம் கூட தெரியாமல் சில நெட்டிசன்கள் […]

Continue reading …