சென்னை, ஏப்ரல் 30 செங்குருதியை வியர்வையாய் சிந்தி உழைத்த தொழிலாளர் வர்க்கம் இன்று கொரானாவெனும் கொள்ளை நோயினால் நான்கு சுவர்களுக்குள் முடக்கப்பட்டு, கட்டுண்டு கிடக்கிறது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அறிக்கை. எஜமானர்களை ஏணியாக இருந்து உயர்த்தி விட்டு, ஓய்வென்பதையே அறியா உழைக்கும் கரங்கள் இன்று வலுக்கட்டாயமாக ஓய்வெடுக்க வைக்கப்பட்டுள்ளது வேதனை.உழைப்பதினால் சொற்ப வருமானமே கிடைத்தாலும் அதில் அளப்பரியா சந்தோசம் கண்டு, மகிழ்ச்சி கடலில் நீந்தி வந்த தொழிலாளர்கள் […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல் 29 மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷவர்தன், நாடு முழுவதும் உள்ள அரிமா சங்க உறுப்பினர்களுடன் இன்று காணொளி வாயிலாகக் கலந்துரையாடினார். அப்போது, உரையாற்றிய அவர், கொவிட்-19 தொற்றுக்கு எதிராக நாம் நடத்தி வரும் போராட்டத்தில் பாராட்டத்தகுந்த வகையில் பங்களித்து வரும் அரிமா சங்க உறுப்பினர்களின் செயல்பாட்டை நான் மிகவும் மதிக்கிறேன். குறிப்பாக, பிரதமர் கேர்ஸ் நிதி மூலம் பங்களிப்பு, மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள், உணவு, கிருமி நாசினிகள், தனிநபர் […]
Continue reading …சென்னை, ஏப்ரல் 29 கண்ணுக்கு தெரியாத கிருமி இப்பூமிப்பந்தில் மனித வாழ்வையே புரட்டி போட்டு விட்டது. ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்திருந்தாலும் உயிர்களைப் பறிப்பதை கொரோனா நிறுத்தவில்லை. அதிலிருந்து மீள உலகமே ஒரு பெரும் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. இப்போரில் பெரிதும் போற்ற வேண்டியவர்களும் வணங்குதலுக்குரியவர்களும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர். மருத்துவர்களின் தியாக உணர்வை பாராட்டி அவர்களை கௌரவித்து அவர்ளுக்கு பாதுகாப்பு முதற்கொண்டு பல்வேறு திட்டங்களை செய்ய அரசு முன் முன்வந்திருப்பது […]
Continue reading …சென்னை, ஏப்ரல் 29 காவேரி நீர் மேலாண்மை ஆணையம் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதற்கு பொதுப்பணித் துறையின் விளக்கம்.மத்திய அரசு 24.4.2020 அன்று காவேரி நீர் மேலாண்மை ஆணையம் குறித்து வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கை சம்பந்தமாக கீழ்க்கண்ட விளக்கம் அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு எடுத்த இடைவிடாத சட்டபோராட்டத்தின் விளைவாக காவேரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அதை அப்போதைய நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் 1.6.2018 அன்று மத்திய அரசிதழில் […]
Continue reading …நீலகிரி, ஏப்ரல் 29 நீலகிரி மாவட்டம் குன்னூர் மரப்பாலம் அருகே செல்பி எடுக்க முயன்றபோது நீர் வீழ்ச்சியில் விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் பகுதியில் டீ கடை வைத்திருப்பவர் ஸ்ரீரிதரன் இவரது மகன் அகில் 20 வயது இவர் கோவை தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார், நேற்று மாலையில் குளிக்க ஆற்றுக்கு சென்றவர் அங்கிருந்த அருவி முன்பு செல்பி எடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது, மாலை ஆகியும் […]
Continue reading …சென்னை, ஏப்ரல் 29 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியின் ஆணையாளர்களுடன் காணொலி காட்சி மூலமாக இன்று ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனோ வைரஸ் நோய் தொற்றின் தற்போதைய நிலவரமும், அதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்குறித்தும் கேட்டறியப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்பணிகளை தீவிரப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன ஒவ்வொரு மாவட்டத்திலும் நோய் பரவலின் தற்போதைய நிலைக்கு ஏற்ப எந்தந்த […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல் 29 நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுய உதவிக் குழுக்கள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் கீழ் உள்ள தீன்தயாள் அந்யோதயா யோஜ்னா – தேசிய நகர்ப்புற வாழ்வாதரத் திட்டம் (Deendayal Antyodaya Yojana – National Urban Livelihoods Mission – DAY-NULM) என்ற முன்னோடித் திட்டத்தின் கீழ் கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் சுயஉதவிக் குழுக்களின் இடைவிடாத முயற்சி, ஆக்கப்பூர்வமான சக்தி மற்றும் […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல், 29 கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடுவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார். கொரோனா வைரஸ் தாக்குதலின் விளைவாக இன்று உலக அளவில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர். உலகளாவிய அளவில் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, பொருட்கள் கிடைப்பதை தொடர்ந்து நிலைநிறுத்துவது, ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். கனடா நாட்டில் தற்போது வசித்து வரும் இந்திய குடிமக்களுக்கு, குறிப்பாக இந்திய […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல் 29 பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவ முன்வந்துள்ள மத்திய வேளாண் அமைச்சகம், அவர்களது விளை பொருட்களை எடுத்துச் செல்ல வழிகாட்டியுள்ளது. வேளாண் விளைபொருட்களை எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, இம்மாதம் 17-ம் தேதி விவசாயிகளுக்கான கிசான் ரத் எனப்படும் போக்குவரத்து ஒருங்கிணைப்பு கைபேசி செயலி தொடங்கப்பட்டது. கட்டுப்பாடு இல்லாமல் பரவி வரும் கொடிய கோவிட்-19 தொற்றை முறியடிப்பதற்கான நீட்டிக்கப்பட்ட பொது முடக்கத்தின் மத்தியில் நமது நாடு உள்ளது. தமிழக அரசு […]
Continue reading …சென்னை, ஏப்ரல் 29 சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளில், இன்று (29.4.2020) புதன்கிழமை இரவு வரை அமலில் இருக்கும் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், நாளை முதல் 26.4.2020க்கு முன்பு இருந்த நிலைப்படி ஊரடங்கு தொடரும்.எனினும், 30.4.2020 (வியாழக்கிழமை) அன்று மட்டும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கு வதற்கு ஏதுவாக காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் […]
Continue reading …