புது டெல்லி, ஏப்ரல் 28 மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மன்சுக் மாண்டவியா இந்தியத் துறைமுகங்களில் பணிக்குழுக்களை மாற்றுவது குறித்து பயணிகள் கப்பல்களை இயக்குபவர்கள், கப்பல் நிறுவனங்கள், கடற்பயண கூட்டமைப்புகள், மாலுமிகளின் சங்கங்கள் ஆகியவற்றுடன் காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். சர்வதேசக் கடற்பரப்பில் வேலை செய்கின்ற மற்றும் சிக்கித் தவிக்கின்ற இந்திய மாலுமிகளின் சூழ்நிலையைக் கண்காணிப்பது குறித்தும் அவர் கலந்துரையாடினார். வரும் காலத்தில் இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கு ஏதுவாக தற்போது வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல் 28 அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் விநியோகிக்கும் சேவையில் நாடெங்கிலும் 403 உதான் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. உயிர்காக்கும் உதான் சேவையில் ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப்படை, தனியார் விமானங்கள் ஆகியவற்றின் மூலம் 403 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 235 விமானங்கள் ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் ஏர் நிறுவனங்களால் இயக்கப்பட்டன. இதுவரை, 748.68 டன் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கொண்ட சரக்குப் போக்குவரத்து கையாளப்பட்டுள்ளது. இது நாள்வரை உயிர்காக்கும் உதான் விமானங்கள் 3,97,632 […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல் 28 நாடு முழுக்க பஞ்சாயத்துகளுக்கு டிஜிட்டல் அதிகாரம் அளிக்க அரசு பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது என்று மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் டோமர் கூறியுள்ளார். பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் ஸ்வமித்வா என்ற புதிய திட்டத்தின் வழிகாட்டுதல்களை புதுதில்லியில் அவர் வெளியிட்டு பேசினார். தங்கள் வீட்டு சொத்துகளை ஆவணப்படுத்தும் உரிமையை கிராமப்புற மக்களுக்கு வழங்கும் வகையில் இந்தத் திட்டம் இருக்கும் என்றும், இந்த விவரங்களைப் […]
Continue reading …வேலூர்,ஏப்ரல் 28 கென்னடி வேலூர் மாவட்டம், காட்பாடியில் கள்ள சாராயம் விற்ற 3 பேர் கைது, 90 லிட்டர் சாராயம் அழிப்பு. காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் தெருவில் கள்ளசாராயம் விற்பதாக விருதம்பட்டு காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலையடுத்து அம்பேத்கர் தெருவில் உள்ள பொதுக் கழிவறையின் பின்புறம் மறைத்து வைத்திருந்த சுமார் 60 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்தனர்.கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த பல்லு (எ) ஜெய மணிகண்டன் (32), காளியப்பன் (28) ஆகிய […]
Continue reading …சென்னை, ஏப்ரல் 27 சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, சுதந்திரத்தை பற்றி தத்துவமாக பொழிந்து இருந்தார் நடிகை அமலா பால். அவரது பதிவை பார்த்த நடிகர் விஷால், நீங்க ஒரு சிறந்த நடிகை, உங்க தொழில் தான் உங்களுக்கு சுதந்திரத்தை தரும் என அட்வைஸ் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது தனது புதிய புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அமலா பால், சுய அன்பு என்பது நடு விரல் போன்றது […]
Continue reading …கோவிட் 19 நோய்க்கு எதிரான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இவை மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நாடுமுழுவதும் கண்டிப்பாக பின்பற்றப்பட்டு வருகின்றன. கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டவரைக் கண்டறிந்து, அவர்களிடமிருந்து வைரஸ் தொற்றி விடாமல் பாதுகாப்பான தொலைவில் இருக்க உதவும் வகையிலான ஆரோக்கிய சேது என்ற செயலியையும் மத்திய அரசு ஒரு முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மாநில தகவல் தொழில்நுட்பத் துறை, அனைத்துத் துறை ஊழியர்களும் ஆரோக்கிய சேது அலைபேசி செயலியைப் பயன்படுத்துமாறு அனைத்து துறைகளையும் அறிவுறுத்தியுள்ளது. தாங்கள் எந்த அளவிற்கு கோவிட் 19 (கொரோனா வைரஸ்) நோயால் பாதிக்கப்படலாம் என்பதை […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல் 27 உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நோவல் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை இந்திய விமானப் படை அதிகரித்துள்ளது. இந்நோயை, பயனுள்ள முறையில் எதிர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் மாநில அரசுகளுக்கும், ஆதரவு முகமைகளுக்கும் உதவும் வகையில், மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை விமானம் மூலம், இந்திய விமானப்படை தொடர்ந்து ஏற்றிச் சென்று வருகிறது. கோவிட் 19 நோய்க்கு எதிராகப் போராடுவதற்கு உதவும் வகையில் 22 டன் எடையுள்ள மருந்துப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மிசோரமில் உள்ள Lengpui லெங்க்புயி விமானநிலையத்திற்கு இந்திய விமானப்படை விமானம் 25/04/2020 அன்று சென்றடைந்தது. இந்த மருந்துப் பொருட்கள் மிசோரம் […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல் 27 கோவிட்-19 நோய்த் தொற்று சூழ்நிலையில் மாறி வரும் சூழ்நிலைகள் பற்றியும், சூழ்நிலையைக் கையாள்வது பற்றியும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். கோவிட்-19 பாதிப்புக்குப் பிறகு காணொளி மூலம் முதலமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடல் மேற்கொள்வது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்பு மார்ச் 20, ஏப்ரல் 2, ஏப்ரல் 11 ஆகிய தேதிகளில் காணொளிக் காட்சி மூலம் முதலமைச்சர்களுடன் அவர் கலந்துரையாடியுள்ளார். முடக்கநிலை […]
Continue reading …வேலூர்,ஏப்ரல் 27கென்னடி வேலூரில், போலீசார் நடத்திய சோதனையில், ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 100 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்திவந்த 13 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டன.வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் ஆணையின்படி, வேலூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்திரவின்பேரில், பாகாயம் காவல் வட்ட ஆய்வாளர் நந்தகுமார் தலைமையில் அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசோக்குமார் பார்ட்டி ஆகியோர் சேர்ந்து, முக்கிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.வேலூரின், சகிதம் அரியூர் […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல் 26 எனதருமை நாட்டுமக்களே, நீங்கள் அனைவரும் பொது ஊரடங்குக் காலத்தில் இந்த மனதின் குரலைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த மனதின் குரலின் பொருட்டு வந்த ஆலோசனைகள், தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பார்க்கும் போது, எப்போதும் வருவதை விட பல மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்றது. ஏகப்பட்ட விஷயங்களை தனக்குள் தாங்கிக் கொண்டு, உங்களது இந்த மனதின் குரல் என் வரையில் வந்திருக்கின்றது. இவற்றை எத்தனை அதிகம் முடியுமோ அத்தனை அதிகம் படிக்க […]
Continue reading …