புது டெல்லி, ஏப்ரல் 22 சர்வதேச பூமி தினத்தை ஒட்டி அன்னை பூமிக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். நமக்கு அளவற்ற ஆரோக்கியமும், கருணையும் காட்டும் நம் அன்னை பூமிக்கு, சர்வதேச பூமி தினத்தை ஒட்டி, நாம் அனைவரும் நன்றி செலுத்துவோம். தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் அதிக வளமான பூமியை உருவாக்கப் பாடுபடுவதற்கு நாம் அனைவரும் உறுதியேற்போம். கோவிட்-19 நோய்த் தாக்குதலை முறியடிக்க முன்களத்தில் நின்று போராடும் அனைவருக்கும் உரத்த குரலில் நன்றி செலுத்துவோம் […]
Continue reading …சென்னை, ஏப்ரல்22 தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை : கொரோனா தொற்று நோய் போராட்டத்தில் முன் நின்றுபணிபுரியும் அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறையைச் சார்ந்த பணியாளர்கள், காவல்துறை மற்றும் பிறஅரசுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சிஅமைப்பின் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், எவருக்கேனும் இந்நோய் ஏற்பட்டால் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் எனவும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் கொடுக்கப்படும் எனவும், எதிர் பாராதவிதமாக இறப்பு ஏற்படுமானால் அவர்களின் […]
Continue reading …சென்னை, ஏப்ரல்22 கோவிட்-19 க்கு எதிராக அதிவிரைவு செயலி மற்றும் இணையதளங்களை உருவாக்க அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு, அண்ணா பல்கலைக்கழகத்தின் திருச்சி BIT வளாகம் முன்முயற்சி எடுத்து விடுத்துள்ள இந்தத் திட்டத்தில். மும்பை ஐ.ஐ.டி யில் இயங்கும் Spoken Tutorial Project, சென்னையிலுள்ள Madras School of Social work (MSSW), புதிய தொழில் முனைவோருக்கான வழிகாட்டு மய்யமாக பெங்களுரில் இயங்கும் Derbi Foundation, பேரிடர் மேலாண்மையில் சிறப்பான அனுபவங்களையும் பயிற்சிகளையும் கொண்ட நிறுவனம் என இந்தியா […]
Continue reading …மயிலாடுதுறை, ஏப்ரல், 21 தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜன் மீது தேவையற்ற விமர்சனம் செய்த நடிகை ஜோதிகாவுக்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை கடும் கண்டனம். சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நடிகை ஜோதிகா, தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் மீது தேவையற்ற விமர்சனங்கள் செய்துள்ளார். இதற்கு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள கண்டன […]
Continue reading …சென்னை, ஏப்ரல் 21 சென்னையில் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மேலும் பல பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக, அவர்களுக்கும் கொரோனா வைரஸ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிகம் ஆளாவோர் பட்டியலில் மருத்துவர்களுக்கு அடுத்தப்படியாக பத்திரிகையாளர்கள் தான் உள்ளனர். மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியிலும் கணிசமான பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
Continue reading …சென்னை : தமிழ்நாடு அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்காக, ஜோதிடர் ஷெல்வி, 2 டன் அரிசியை நேற்று நன்கொடையாக வழங்கினார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுத்து வருகிறது. முதல்வரின் நிவாரண நிதிக்கு, பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் என பலரும், தங்களால் இயன்ற அளவுக்கு, உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், […]
Continue reading …கொவிட்-19 முடக்க நிலை காலத்தில், இந்திய ரெயில்வே ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் இது வரையிலும் 20.5 லட்சத்திற்கும் கூடுதலான உணவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளது. வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு மற்றும் தென்மத்திய ரெயில்வே மண்டலங்களில் உள்ள புதுதில்லி, பெங்களூர், ஹுப்ளி, மத்திய மும்பை, அகமதாபாத், பூசாவல், ஹௌரா, பாட்னா, கயா, ராஞ்சி, கதிஹார், தீன் தயாள் உபாத்யாய நகர், பாலசோர், விஜயவாடா, குர்தா, காட்பாடி, திருச்சிராப்பள்ளி, தன்பத், கௌகாத்தி, சமஸ்திபூர், பிரயாக்ராஜ், இட்டாசி, விசாகப்பட்டினம், செங்கல்பட்டு, பூனா, ஹாஜிப்பூர், ராய்பூர் மற்றும் டாட்டாநகர் […]
Continue reading …சென்னை : தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள மே 3ம் தேதி வரை தொடர்ந்து கடைப்பிடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு வெளியிட்ட ஆணையில், 20.4.2020க்குப் பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, குஜராத் […]
Continue reading …சென்னை : தமிழகத்தில் அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு வெளியிட்ட ஆணையின் படி எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதற்கென, மாநில அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்து உள்ளது. அந்தகுழு, தன் முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, அதனுடைய […]
Continue reading …சென்னை : தமிழகத்தில் இதுவரை 1,372 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 49 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் பிரகாஷ், சென்னைக்கு முதல் கட்டமாக, 6,000 ரேபிட் டெஸ்ட் கிட் வந்துள்ளதாகவும், அதன் மூலம் பரிசோதனை செய்ய 26 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு முதலில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை செய்யப்படும் எனவும், தடை செய்யப்பட்ட பகுதிகள் அல்லாத மற்ற […]
Continue reading …