Home » Entries posted by admin (Page 39)
Entries posted by admin

பதான்கோட் தாக்குதல் குறித்து வழக்கு பதிவு செய்தது பாகிஸ்தான்: உள்துறை இணையமைச்சர் தகவல்

Comments Off on பதான்கோட் தாக்குதல் குறித்து வழக்கு பதிவு செய்தது பாகிஸ்தான்: உள்துறை இணையமைச்சர் தகவல்

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த பதில் வருமாறு: பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதி கள் தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, அதற்கான ஆதாரங்கள் அந்நாட்டு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குத லில் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிப்பதற்காக பாகிஸ்தான் அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. இதன்மூலம் இந்த விவகாரத்தில் முதன்முறையாக பாகிஸ்தான் அரசு […]

Continue reading …

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை உடனே அறிவிக்க மோடிக்கு ஜெ. வலியுறுத்தல் !

Comments Off on தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை உடனே அறிவிக்க மோடிக்கு ஜெ. வலியுறுத்தல் !

2014-15 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது இணங்க தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அரசு விரைவில் உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், “2014-15 மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து 2014 ஜூலை 17-ல் நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தில், பட்ஜெட் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்திருந்தேன். அதுமட்டுமல்லாது தமிழகத்தில் எய்ம்ஸ் […]

Continue reading …

நடிகர்களுக்காக சண்டையிடாமல் அரசியலை விவாதிப்பீர்: இளைஞர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை

Comments Off on நடிகர்களுக்காக சண்டையிடாமல் அரசியலை விவாதிப்பீர்: இளைஞர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை

ஏதாவது ஒரு கட்சியில் அடிப்படை உறுப்பினராகவாவது இளைஞர்கள் இருக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.  அருண் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘சேதுபதி’. பிப்ரவரி 19ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் விஜய்சேதுபதி. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது: “சினிமா […]

Continue reading …

தமிழக இடைக்கால பட்ஜெட் 2016: முக்கிய அம்சங்கள் !

Comments Off on தமிழக இடைக்கால பட்ஜெட் 2016: முக்கிய அம்சங்கள் !

தமிழக இடைக்கால பட்ஜெட்டுக்கு ரூ.60,610 கோடி ஒதுக்கீடு * தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் தாக்கல் செய்தார். மாநில பேரிடர் நிவாரண நிதியத்துக்கு ரூ.713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகக் கூறினார். தமிழக இடைக்கால பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்: இடைக்கால பட்ஜெட்டுகாக ரூ.60,610 கோடி நிதி ஒதுக்கீடு. * காவல்துறைக்கு ரூ.6099 கோடி […]

Continue reading …

கள்ளக்குறிச்சி மாணவிகள் தற்கொலை விவகாரம்: தனியார் சித்த மருத்துவக் கல்லூரிக்கு சீல் !

Comments Off on கள்ளக்குறிச்சி மாணவிகள் தற்கொலை விவகாரம்: தனியார் சித்த மருத்துவக் கல்லூரிக்கு சீல் !

  “கள்ளக்குறிச்சி அருகே தனியார் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கல்லூரி நிர்வாகம் அவர்களை அடித்து கொலை செய்துள்ளது” என மாணவிகளின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து நேற்று கல்லூரிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.   கள்ளக்குறிச்சி அருகே பங்கா ரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை […]

Continue reading …

நடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனா திடீர் மரணம்!

Comments Off on நடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனா திடீர் மரணம்!

பிரபல திரைப்பட நடிகையும், நடிகை ஊர்வசியின் சகோதரியுமான கல்பனா திடீரென மாரணடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.தமிழில் நடிகர் கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம், பாக்யராஜுயுடன் சின்னவீடு மற்றும் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை கல்பனா (51). சின்னவீடு இவருக்கு தமிழில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்த படம். தெலுங்கு படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த கல்பனாவுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு […]

Continue reading …

ஒலிம்பிக் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்: சானியா மிர்சா உற்சாகம் !

Comments Off on ஒலிம்பிக் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்: சானியா மிர்சா உற்சாகம் !

ஒலிம்பிக் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார். பெண்களுக்கான இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்த ஆண்டு 10 சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார் சானியா மிர்சா. இதன்மூலம் இரட்டையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையாக இருக்கும் சானியா மிர்சா, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பெண்களுக்கான இரட்டையர் டென்னிஸில் நானும் மார்டினா ஹிங்கிசும் நம்பர் ஒன் ஜோடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது […]

Continue reading …

வானிலை முன்னறிவிப்பு: மேலும் 4 நாள் கனமழை நீடிப்பு !

Comments Off on வானிலை முன்னறிவிப்பு: மேலும் 4 நாள் கனமழை நீடிப்பு !

தமிழகத்தில் மேலும் 3 முதல் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறும்போது, “இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகள் நிலை கொண்டுள்ளன. இவை மேற்கு நோக்கி நகர்ந்து வருகின்றன. இதனால், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும். கடலோர மாவட்டங்களில் கனமழை […]

Continue reading …

தமிழ்நாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம்: பிரதமர் மோடி !

Comments Off on தமிழ்நாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம்: பிரதமர் மோடி !

புதுடெல்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார். வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த பகுதி காரணமாக தமிழ்நாட்டில், சென்னை உள்ளிட்ட பல வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. ரூ.8,500 கோடி அளவுக்கு வெள்ளச்சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறி, மத்திய குழுவை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் […]

Continue reading …

மழைக்கால மருத்துவ முகாம் மூலம் நாள்தோறும் 1 லட்சம் பேருக்கு பரிசோதனை, சிகிச்சை: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் !

Comments Off on மழைக்கால மருத்துவ முகாம் மூலம் நாள்தோறும் 1 லட்சம் பேருக்கு பரிசோதனை, சிகிச்சை: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் !

தமிழகத்தில் மழைக்கால மருத்துவ முகாம் மூலம் தினமும் 1 லட்சம் பேருக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னையில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிவாரணப் பணிகள் மற்றும் அந்த பகுதிகளில் அமைக் கப்பட்டுள்ள மழைக்கால மருத்துவ முகாம்களை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தினமும் நேரில் சென்று பார்வை யிட்டு வருகிறார். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா […]

Continue reading …