Home » Entries posted by admin (Page 40)
Entries posted by admin

வானிலை முன்னறிவிப்பு: மேலும் 4 நாள் கனமழை நீடிப்பு !

Comments Off on வானிலை முன்னறிவிப்பு: மேலும் 4 நாள் கனமழை நீடிப்பு !

தமிழகத்தில் மேலும் 3 முதல் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறும்போது, “இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகள் நிலை கொண்டுள்ளன. இவை மேற்கு நோக்கி நகர்ந்து வருகின்றன. இதனால், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும். கடலோர மாவட்டங்களில் கனமழை […]

Continue reading …

தமிழ்நாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம்: பிரதமர் மோடி !

Comments Off on தமிழ்நாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம்: பிரதமர் மோடி !

புதுடெல்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார். வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த பகுதி காரணமாக தமிழ்நாட்டில், சென்னை உள்ளிட்ட பல வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. ரூ.8,500 கோடி அளவுக்கு வெள்ளச்சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறி, மத்திய குழுவை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் […]

Continue reading …

மழைக்கால மருத்துவ முகாம் மூலம் நாள்தோறும் 1 லட்சம் பேருக்கு பரிசோதனை, சிகிச்சை: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் !

Comments Off on மழைக்கால மருத்துவ முகாம் மூலம் நாள்தோறும் 1 லட்சம் பேருக்கு பரிசோதனை, சிகிச்சை: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் !

தமிழகத்தில் மழைக்கால மருத்துவ முகாம் மூலம் தினமும் 1 லட்சம் பேருக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னையில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிவாரணப் பணிகள் மற்றும் அந்த பகுதிகளில் அமைக் கப்பட்டுள்ள மழைக்கால மருத்துவ முகாம்களை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தினமும் நேரில் சென்று பார்வை யிட்டு வருகிறார். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா […]

Continue reading …

700 ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் பற்றி தகவல் சொன்ன தமிழக கோவில்!

Comments Off on 700 ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் பற்றி தகவல் சொன்ன தமிழக கோவில்!

புதுடெல்லி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 700 ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் பற்றிய தகவல் குறிப்பிடப்பட்டு உள்ளது. பூமிக்கு மேல் இயற்கையாகவே ஓசோன் படலம் அமைந்துள்ளது. சூரியனில் இருந்து வரும் உடலுக்கு தீங்கான புற ஊதாக்கதிர்கள், பூமியைத் தாக்காதவாறு அந்த படலம்தான் பாதுகாக்கிறது. ஆனால், அப்படிப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய படலமானது காற்றில் கலந்து வரும் நச்சு வாயுக்களால் சமீபகாலமாக சேதமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓசோன் படலம் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, டெல்லியில் உள்ள பசுமை […]

Continue reading …

ஜல்லிக்கட்டு தொடர வேண்டும்: கமல்ஹாசன் !

Comments Off on ஜல்லிக்கட்டு தொடர வேண்டும்: கமல்ஹாசன் !

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்று ‘வீர விளையாட்டு’ புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்தார். சென்னையில் புகைப்படக் கலைஞர் சுரேஷ் எடுத்த ஜல்லிக்கட்டு புகைப்படங்களை ‘வீர விளையாட்டு’ என்ற பெயரில் கண்காட்சியாக வைத்திருக்கிறார். இக்கண்காட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். நவம்பர் 8ம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெற இருக்கிறது. ‘வீர விளையாட்டு’ கண்காட்சியைத் தொடங்கி வைத்து பேசிய கமல்ஹாசன், “‘ஜல்லிக்கட்டு’ தொந்தரவு பண்ற விழா என்று பல பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். […]

Continue reading …

சரத்குமார் – ராதாரவி கைது ஆகிறார்கள் – சங்க தலைவர் நாசர் பேட்டி!

Comments Off on சரத்குமார் – ராதாரவி கைது ஆகிறார்கள் – சங்க தலைவர் நாசர் பேட்டி!

தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக நாசர், சரத்குமாரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சூழ்நிலையில் பரபரப்பாக இயங்கிய போதிலும் நவீன நெற்றிக்கண் வார இதழுக்கு பேட்டி என்றதும் உடனே மகிழ்ச்சியுடன் வாருங்கள் என்றார். வடபழனியில் ‘யு’ டி.வி. தனஞ்செயன் நடத்தும் திரைப்பட பயிற்சி பள்ளியில் மேல் தளத்தில் அங்கு பயிற்சி பெறும் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த நாசர் நம்மை பார்த்ததும் அவர்களை போகச்சொல்லிவிட்டு, நம்மிடம் பேசத்தொடங்கினார். “நடிகர் சங்க கட்டிட ஒப்பந்தம் குறித்து கேட்டபோது, சரியாக பதில் […]

Continue reading …

நடிகர் சங்க தேர்தல்: விஷாலுக்கு ராதாரவி சவால்!

Comments Off on நடிகர் சங்க தேர்தல்: விஷாலுக்கு ராதாரவி சவால்!

கரூர்: நாடக நடிகர்களுக்கு நிலம் தருவதாக விஷால் கூறுகிறார். அதை அவர் உடனே கொடுத்தால், நான் போட்டியில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று நடிகர் விஷாலுக்கு நடிகர் ராதாரவி சவால் விட்டுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகின்ற 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் மற்றொரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். சரத்குமார் அணியை சேர்ந்த ராதாரவி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், கரூர் மாவட்ட நாடக நடிகர்களை சந்திப்பதற்காக கரூர் […]

Continue reading …

குற்றப்பின்னணி உள்ளவர்கள் வழக்கறிஞராவதை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் !

Comments Off on குற்றப்பின்னணி உள்ளவர்கள் வழக்கறிஞராவதை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் !

மூன்று ஆண்டு சட்டப்படிப்பை ரத்து செய்துவிட்டு மருத்துவம், இன்ஜினீயரிங் போன்ற தொழில் படிப்புகள்போல 5 ஆண்டு சட்டப்படிப்பை மட்டும் வைத்திருக்க வேண்டும் என்று இந்திய பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. இந்திய பார் கவுன்சில் தேர்தலுக்கும், குற்றப் பின்னணி உள்ளவர்கள் சட்டப் படிப்பு படிக்கவும், வழக்கறிஞராக பதிவு செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கவும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத் தில் எஸ்.எம்.ஆனந்த முருகன் […]

Continue reading …

ஹஜ் யாத்திரை நெரிசலில் 14 இந்தியர்கள் உயிரிழப்பு: சுஷ்மா ஸ்வராஜ் தகவல் !

Comments Off on ஹஜ் யாத்திரை நெரிசலில் 14 இந்தியர்கள் உயிரிழப்பு: சுஷ்மா ஸ்வராஜ் தகவல் !

ஹஜ் புனித் யாத்திரை நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல இந்தியர்கள் உட்பட 805-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் மீட்புப் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1.5 லட்சம் முஸ்லிம்கள் உட்பட உலகம் முழுவதும் இருந்து 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் […]

Continue reading …

முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.2,42,160 கோடி முதலீடு: நிறைவுரையில் முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சி !

Comments Off on முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.2,42,160 கோடி முதலீடு: நிறைவுரையில் முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சி !

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் சுமார் ரூ. 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இது எதிர்பார்த்ததை விட இருமடங்காகும். தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடி இலக்கு நிர்ணையித்திருந்தது என்று அவர் பெருமிதத்துடன் கூறினார். சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் வியாழக்கிழமை மாலை முதல்வர் ஜெயலலிதா பேசியதன் முக்கிய அம்சங்கள்: * “உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.2,42,160 கோடி முதலீடு […]

Continue reading …