Home » Entries posted by admin (Page 37)
Entries posted by admin

கொரோனோ வைரசுக்கு மருந்து : ஊரை ஏமாற்றி கோடிகளை குவிக்கும் போலி சித்தா டாக்டர் திருத்தணிகாசலம்!

Comments Off on கொரோனோ வைரசுக்கு மருந்து : ஊரை ஏமாற்றி கோடிகளை குவிக்கும் போலி சித்தா டாக்டர் திருத்தணிகாசலம்!
கொரோனோ வைரசுக்கு மருந்து : ஊரை ஏமாற்றி கோடிகளை குவிக்கும் போலி சித்தா டாக்டர் திருத்தணிகாசலம்!

தீராத வியாதிகளுக்கும், மருந்து கண்டுபிடிக்க முடியாத நோய்களுக்கும், குணப்படுத்தவே முடியாத நோய்களுக்கும் என்னிடம் மருந்து உள்ளது. நான் குணப்படுத்தி விடுவேன் என்று கூறி மக்களையும் அரசையும் ஏமாற்றும் படிக்காத மேதை ‘டுபாக்கூர்’ டாக்டர் திருத்தணிகாசலம் அவர்களின் தில்லாலங்கடி மோசடிகளை பார்ப்போம்! சென்னை, கோயம்பேடு, ஜெய்நகர் 23வது தெரு கதவிலக்கம் 8/18ல் கோயம்பேடு பேருந்துநிலையம் எதிரில் இயங்கி வரும் பிரபல சித்தா மருத்துவ மனைதான் ரத்னா மருத்துவமனை. இதன் உரிமையாளர், நிர்வாகி, டாக்டர் என அனைத்துமே ஐயா ‘டுபாக்கூர்’ […]

Continue reading …

61 ஐ.பி.எஸ் பணியிட மாற்றம் !

Comments Off on 61 ஐ.பி.எஸ் பணியிட மாற்றம் !

சென்னை: தமிழகத்தில் 61 ஐ.பி.எஸ். பணியிட மாற்றம் செய்யப்பபட்டுள்ளனர்.  இது குறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பில் உள்ள விவரம் வருமாறு, மதுரை போக்குவரத்து துறை துணை கமிஷனர் பாலகோபாலன் தூத்துக்குடி எஸ்.பி.,யாக, மயிலாப்பூர் மயில்வாகனன் – போக்குவரத்து துறைக்கும், திருவள்ளூர் எஸ்பி – பொன்னி, லஞ்ச ஒழிப்பு துறைக்கும், நாகை எஸ்.பி., விஜயகுமார் சிபிசிஐடி., பிரிவுக்கும் , கடலூர் எஸ்பி சரவணன் சிபிசிஐடி எஸ்பியாகவும், நீலகிரி எஸ்.பி.,யான சண்முகபிரியா சென்னை சைபர் குற்றப்பிரிவுக்கும், மாற்றப்பட்டுள்ளனர்.  சென்னை நுண்ணறிவு பிரிவு […]

Continue reading …

ஏப்.16 மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டத்துக்கு தடை- தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு !

Comments Off on ஏப்.16 மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டத்துக்கு தடை- தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு !

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல், தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம், பேரணி நடத்தக் கூடாது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18-ம் தேதி (வியாழன்) நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது. இதில் மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு […]

Continue reading …

விண்ணில் பாய்ந்தது ‘பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்’ !

Comments Off on விண்ணில் பாய்ந்தது ‘பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்’ !
விண்ணில் பாய்ந்தது ‘பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்’ !

8 நாடுகளுக்குச் சொந்தமான 31 செயற்கைக்கோள் மற்றும் இந்தியாவின் ஹைசிஸ் செயற்கைக்கோளைச் சுமந்து பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் சிறிஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 28 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று அதிகாலை 5.58 மணிக்கு தொடங்கியது. கவுன்ட்டவுன் முடிந்தவுன், இஸ்ரோ உருவாக்கிய ஹைசிஸ் (Hyper Spectral Imaging Satellite) செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் முதலாவது ஏவுதளத்தில் இருந்து […]

Continue reading …

அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன !

Comments Off on அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன !

தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக அணிகள் இணைப்பு நடைபெற்றது. அணிகள் இணைப்பை ஓபிஎஸ் அறிவித்தார். தொண்டர்கள் விருப்பப்படி இரு அணிகளும் இணைந்ததாகவும் இனி தங்களை யாராலும் பிரிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

Continue reading …

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு !

Comments Off on ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு !

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதற்குப் பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். விசாரணை ஆணையம் ஜெயலலிதா இறப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது. ஜெயலலிதா […]

Continue reading …

“எம்ஜிஆர் எ லைஃப்” – ஆர்.கண்ணன் !

Comments Off on “எம்ஜிஆர் எ லைஃப்” – ஆர்.கண்ணன் !

பெங்குயின் பதிப்பகம், ஆர்.கண்ணன் எழுதியிருக்கும் எம்ஜிஆர் எ லைஃப் என்ற புத்தகத்தை பதிப்பித்திருக்கிறது. மெட்ராஸ் புக் கிளப் மற்றும் பெங்குயின் பதிப்பகம் இணைந்து நடத்திய இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பெற்றுக் கொண்டார். சிறு வயதில் இருந்து திராவிட இயக்கங்களில் இருக்கும் கண்ணன், எம்ஜிஆர் பற்றிய புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஐநா சபையில் இருந்தவர் இந்த […]

Continue reading …

‘சென்னை 28’ படம் வெளியாகி 10 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது !

Comments Off on ‘சென்னை 28’ படம் வெளியாகி 10 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது !

ஜாதி, மதம், மொழி போன்றவைகளால் நம் இந்தியா வேறுபட்டு இருந்தாலும், கிரிக்கெட் என்ற ஒரு விளையாட்டால் ஒன்றுபட்டு தான்  இருக்கின்றது என்பதை நம் அனைவருக்கும் மிக ஆழமாக  உணர்த்திய திரைப்படம் – 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘சென்னை 28’. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படத்தின் ‘பௌலிங்கா பீல்டிங்கா?’, ‘பாட்டி போட்டோ உடைஞ்சு போச்சுடா, என்ன கொடுமை சார்” ஆகிய வசனங்களை   இன்றளவும் இளைஞர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி கொண்டு தான் […]

Continue reading …

இந்திய ஜனாதிபதியாக மீண்டும் ஒரு பெண் – கணித்து சொல்கிறார் சேலத்து ஜோதிடர் !

Comments Off on இந்திய ஜனாதிபதியாக மீண்டும் ஒரு பெண் – கணித்து சொல்கிறார் சேலத்து ஜோதிடர் !

சேலம், மிகப் பெரிய ஜனநாயக நாடாக உள்ள இந்திய திருநாட்டின் 14வது ஜனாதிபதித் தேர்தல் வருகின்ற ஜூலை 17ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பொதுவாக மத்தியில் ஆளும் கட்சியினர் ஆதரவானவர்களே ஜனாதிபதியாக அமர முடியும் என்பதால், தற்போது மத்தியில் ஆளும் பி.ஜே.பி.யின் ஆதரவில் பலரும் ஜனாதிபதி கனவில் மிதந்தபடி உள்ளனர். அதேபோல் நாங்களும் சளைத்தவர்களல்ல என்பதுபோல ஜனாதிபதி தேர்தலில் தங்களின் நெருக்கடி இருக்கும் என்பது போல காங்கிரசும் தனது பங்கிற்கு செயல்பட்டுக்கொண்டுள்ளது.  ஆளும் பி.ஜே.பி. சார்பில் 3 […]

Continue reading …

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அழகர் !

Comments Off on பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அழகர் !

மதுரை வைகை ஆற்றில் இன்று காலை பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா இன்று காலை 6.30 மணியளவில் நடைபெற்றது. ஆற்றில் இறங்கிய அழகர் மீது […]

Continue reading …