
சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்ற அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் முடிவால் காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். டெல்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பாதிப்பில்லை: “சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்ற அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் முடிவால் காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு எவ்வித […]
Continue reading …
நான் நாட்டை விட்டு தப்பி ஓடவில்லை. இந்திய நாடாளுமன்றத்தின் எம்.பி.யாக நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து அவற்றிற்கு முழுமையாக கட்டுப்பட்டவன் என தொழிலதிபர் விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் (@TheVijayMallya) மேலும் கூறியிருப்பதாவது: “நான் ஒரு சர்வதேச தொழிலதிபர். தொழில் நிமித்தமாக இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம். நான் நாட்டை விட்டு தப்பி ஓடவில்லை. நான் பயந்தவனும் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தின் எம்.பி.யாக, நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து அவற்றிற்கு […]
Continue reading …
அரசு கேபிள் டிவி மூலம், இல்லந்தோறும் இணைய வசதி திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் இதர இணைய சேவைகள் குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். அதை செயல்படுத்தும் வகையில், கேபிள் டிவி நிறுவனம் […]
Continue reading …
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த பதில் வருமாறு: பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதி கள் தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, அதற்கான ஆதாரங்கள் அந்நாட்டு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குத லில் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிப்பதற்காக பாகிஸ்தான் அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. இதன்மூலம் இந்த விவகாரத்தில் முதன்முறையாக பாகிஸ்தான் அரசு […]
Continue reading …
2014-15 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது இணங்க தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அரசு விரைவில் உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், “2014-15 மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து 2014 ஜூலை 17-ல் நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தில், பட்ஜெட் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்திருந்தேன். அதுமட்டுமல்லாது தமிழகத்தில் எய்ம்ஸ் […]
Continue reading …
ஏதாவது ஒரு கட்சியில் அடிப்படை உறுப்பினராகவாவது இளைஞர்கள் இருக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். அருண் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘சேதுபதி’. பிப்ரவரி 19ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் விஜய்சேதுபதி. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது: “சினிமா […]
Continue reading …
தமிழக இடைக்கால பட்ஜெட்டுக்கு ரூ.60,610 கோடி ஒதுக்கீடு * தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் தாக்கல் செய்தார். மாநில பேரிடர் நிவாரண நிதியத்துக்கு ரூ.713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகக் கூறினார். தமிழக இடைக்கால பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்: இடைக்கால பட்ஜெட்டுகாக ரூ.60,610 கோடி நிதி ஒதுக்கீடு. * காவல்துறைக்கு ரூ.6099 கோடி […]
Continue reading …
“கள்ளக்குறிச்சி அருகே தனியார் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கல்லூரி நிர்வாகம் அவர்களை அடித்து கொலை செய்துள்ளது” என மாணவிகளின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து நேற்று கல்லூரிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். கள்ளக்குறிச்சி அருகே பங்கா ரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை […]
Continue reading …
பிரபல திரைப்பட நடிகையும், நடிகை ஊர்வசியின் சகோதரியுமான கல்பனா திடீரென மாரணடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.தமிழில் நடிகர் கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம், பாக்யராஜுயுடன் சின்னவீடு மற்றும் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை கல்பனா (51). சின்னவீடு இவருக்கு தமிழில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்த படம். தெலுங்கு படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த கல்பனாவுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு […]
Continue reading …
ஒலிம்பிக் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார். பெண்களுக்கான இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்த ஆண்டு 10 சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார் சானியா மிர்சா. இதன்மூலம் இரட்டையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையாக இருக்கும் சானியா மிர்சா, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பெண்களுக்கான இரட்டையர் டென்னிஸில் நானும் மார்டினா ஹிங்கிசும் நம்பர் ஒன் ஜோடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது […]
Continue reading …