சுவிட்சர்லாந்து: சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 2 இந்திய பெண்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது சுவிட்சர்லார்ந்து அரசு. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் சாம்பாதித்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைப்பது வழக்கம். ஆனால் இந்தியா உட்பட பல நாடுகளின் எதிர்ப்பை அடுத்து, தங்கள் நாட்டில் சட்ட விரோதமாக கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் சுமார் 40 பேரின் பெயர் மற்றும் பிறந்த தேதியை வெளியிட்டுள்ளது சுவிட்சர்லாந்து அரசு. சுவிட்சர்லாந்து […]
Continue reading …எதிர்க்கட்சிகள் ஒரணியில் திரள வாய்ப்பு இருப்பதாக மு.க.ஸ்டா லின் கூறியது அவரது சொந்த கருத்து என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். தமிழக பிரச்சினைகளுக்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வரும் ‘புதிய தமிழகம்’ தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கட்சித் தலைமையகமான தாயகத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு வைகோ அளித்த பதில்: உங்களை சந்தித்த திமுக பொருளாளர் […]
Continue reading …ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேர் மீதான வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஜூலை 15-ல் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. பின்னர் கருணை அடிப்படையில், நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக […]
Continue reading …சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக லட்சியத் திமுக தலைவர் டி.ராஜேந்தர் பேட்டியளித்துள்ளார். சென்னை தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். நான் எப்போதும் அரசியல் ஆதாயத்துக்காக ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்ததில்லை. இதற்கு முந்தைய காலக்கட்டங்களில்கூட அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறேன். அவை எல்லாம், அரசியல் ஆதாயத்துக்காக அல்ல. அதிமுக கேட்டுக் கொண்டதால் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கிறேன். […]
Continue reading …நேபாளத்தில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டதால் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. சென்னையில் வலசரவாக்கம், சாந்தோம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டடங்கள் லேசாக குலுங்கியது. தலைநகர் டெல்லி, பிஹார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் மேற்கு வங்கத்திலும், அசாமிலும் நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வு ஏற்பட்டதால் டெல்லி மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து ஊழியர்கள் உடனடியாக வெளியேறினர். டெல்லியில் நில அதிர்வின் தாக்கம் குறித்து அறிக்கை […]
Continue reading …பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கான காரணங்களை உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் விரிவாக தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார். விடுதலை செய்வதற்கான காரணங்களை அவர் தனது 919 பக்க தீர்ப்பில் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். அந்த தீர்ப்பில் […]
Continue reading …செம்மரம் கடத்தும் தொழிலில், சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அப்பாவியான தொழிலாளர்களை மரம் வெட்டும் கூலிகளாக பயன்படுத்தப்படுகின்றனர்! செம்மரங்கள் மருத்துவ குணம் கொண்டவை என்றும், செக்ஸ் குறைபாடுகளை நீக்கும் ‘வயாக்கரா’ மருந்து தயாரிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது! ஆந்திர மாநிலம் & திருப்பதியை ஒட்டிய மலையடிவாரப் பகுதியிலிருந்து வெட்டி கடத்தப்படும் மரங்கள், குறிப்பாக சீனா, ஜப்பான், மலேசியா, மியான்மர், இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு, கடும் […]
Continue reading …பிரான்ஸ்: ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்த கிடைத்த தகவலில், துணை பைலட் வேண்டுமென்றே அந்த விமானத்தை மலையில் மோதச் செய்தது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ப் நகரை நோக்கி சென்ற 4யூ 9525 என்ற பயணிகள் விமானம், பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் விழுந்து நொறுங்கியது. விமானம் 5000 அடி உயரத்தில் பறந்தபோது அபாய எச்சரிக்கை கிடைத்ததாகவும், […]
Continue reading …‘வணக்கம் சென்னை’ படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கவிருக்கும் படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார் சிம்பு. சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் நடிக்க, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான படம் ‘வணக்கம் சென்னை’. அனிருத் இசையமைத்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி அடுத்து என்ன படம் இயக்கவிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தை தனுஷ் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது கிருத்திகா உதயநிதி படத்தை […]
Continue reading …62-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதில், பள்ளிக் கல்வித் துறையின் சீர்திருத்தம், ஆசிரியர் – மாணாக்கர் உறவு, தவறு செய்யும் மாணவர்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு விவாதங்களைத் தூண்டக் கூடிய ‘குற்றம் கடிதல்’ எனும் படம், சிறந்தத் தமிழ்ப் படத்துக்கான விருதை வென்றுள்ளது. சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெறுகிறார். ‘சைவம்’ படத்துக்கு பாடல் எழுதியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. ‘ஜிகர்தண்டா’ எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது. […]
Continue reading …