Home » Entries posted by admin (Page 46)
Entries posted by admin

டெல்லி சட்டசபை தேர்தல் : ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. தீவிரம் !

Comments Off on டெல்லி சட்டசபை தேர்தல் : ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. தீவிரம் !

டெல்லி சட்டசபை தேர்தல் பல திருப்பங்களை கொண்டு உள்ளது. பிரதமர் நரேந்திரமோடியை நம்பி கிரன்பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது பா.ஜ.க. இதனால் டெல்லி பா.ஜ.க.வில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாகக் கூறுகிறார்கள். கிரன்பேடிக்கு அரசியல் நிர்வாகம் தெரியாது என்பதால் கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்த பலர் தற்போது டெல்லி பா.ஜ.க.வில் நொந்துபோயுள்ளனர். இதை புரிந்துகொண்ட மோடி தற்போது களத்தில் இறங்கி உள்ளார். ஆம் ஆத்மி கட்சி சுமார் 25 இடங்களில் பலம் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அக்கட்சித்தலைவர் பல அரசியல் […]

Continue reading …

தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது: ஆளுநர் உரை, பட்ஜெட் குறித்து ஆலோசனை !

Comments Off on தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது: ஆளுநர் உரை, பட்ஜெட் குறித்து ஆலோசனை !

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை நடக்கிறது. இதில், ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட் தயாரிப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப் பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் அங்கு முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தமிழக அமைச்சர வைக் கூட்டம், தலைமைச் செயலகத் தில் நாளை (6-ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து அனைத்து அமைச்சர்களுக் கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் […]

Continue reading …

கவர்ச்சிக் கன்னிகளுடன் ஜி.வி.பிரகாஷ் கும்மாளம்!

Comments Off on கவர்ச்சிக் கன்னிகளுடன் ஜி.வி.பிரகாஷ் கும்மாளம்!

‘டார்லிங்’ படம் பொங்கலுக்கு வெளியாகி எதிர்பாராத வெற்றியுடன் வசூலில் சக்கைப்போடு போடுகிறது. இதில் கதாநாயகனாக அறிமுகமான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மகிழ்ச்சியில் துள்ளாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். அடுத்து பிரகாஷ் நடிக்கும் படத்தின் பெயர் இலியானா நயன்தாரா திரிஷா. பெயரே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டது. அதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். திரிஷாவும் நயன்தாராவும் கவுரவ வேடம் ஏற்கிறார்கள். கயல் ஆனந்தி ஒரு ஜோடி. இன்னொருவருக்காக பல கவர்ச்சியான மாடல் அழகிகளை இன்டர்வ்யூ நடத்துகிறார், பிரகாஷ். ஸ்ரீதேவியும் பாரதிராஜாவும் முக்கிய வேடங்களில் நடிப்பதும் கூடுதல் […]

Continue reading …

இந்தியா – அமெரிக்கா உறவை பலப்படுத்திய பிரதமர் மோடி!

Comments Off on இந்தியா – அமெரிக்கா உறவை பலப்படுத்திய பிரதமர் மோடி!

அமெரிக்க அதிபரின் இந்திய பயணம், இந்திய தாய்க்கு அணிவிக்கப்பட்ட விலைமதிக்க முடியாத மணிமகுட வரலாறு படைத்த மோடி, முதன்முறையாக பிரதமராக அமெரிக்க அதிபரை விமான நிலையத்தில் வரவேற்று சரித்திரம் படைத்துள்ளார். எப்போதுமே பிரதமருக்கும் அதிபருக்கும் இடையே அதிகாரிகள் இருப்பது நடைமுறை. ஆனால் இரு தலைவர்களும் ஹைதராபாத் மாளிகையில் மிகவும் வெளிப்படையாக நடந்து அரசியல் அலசிய காட்சி வரலாற்று சிறப்பு மிக்கது. அமெரிக்காவை வைத்து பிலிம்காட்டி நடக்கும் இந்திய அறிவாளிகளுக்கு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மோடி அடித்த ஆப்பு […]

Continue reading …

66-வது குடியரசு தின விழா: தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தேசியக் கொடியேற்றினார்

Comments Off on 66-வது குடியரசு தின விழா: தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தேசியக் கொடியேற்றினார்

66-வது குடியரசுத் தினத்தையொட்டி சென்னை மெரினாவில் ஆளுநர் கே.ரோசய்யா தேசியக் கொடியை ஏற்றினார். முன்னதாக விழாவுக்கு வருகை தந்த ஆளுநரை முப்படை தளபதிகளும், தமிழக முதல்வரும் வரவேற்றனர். சென்னை மெரினாவில் காந்தி சிலை அருகே நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்றனர். தேசியக் கொடியை ஏற்றிவைத்து முப்படையின் அணிவகுப்பை ஆளுநர் ரோசய்யா ஏற்றுக் கொண்டார், கொடியேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து வீர, தீர சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கப்பட்டது. மாணவி, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் […]

Continue reading …

குடியரசு தின விழா: டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் பிரணாப் முகர்ஜி- மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ‘அசோக சக்ரா’ விருது வழங்கி கவுரவம்

Comments Off on குடியரசு தின விழா: டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் பிரணாப் முகர்ஜி- மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ‘அசோக சக்ரா’ விருது வழங்கி கவுரவம்

66-வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றினார். முன்னதாக அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முப்படைத் தளபதிகள் வரவேற்பு அளித்தனர். முப்படைத் தளபதிகள் மரியாதையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றினார். சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஒபாமா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அசோக சக்ரா விருதுகள் காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த […]

Continue reading …

நடிகை த்ரிஷாவுக்கு ஜனவரி 23-ல் நிச்சயதார்த்தம்

Comments Off on நடிகை த்ரிஷாவுக்கு ஜனவரி 23-ல் நிச்சயதார்த்தம்

பிரபல நடிகை த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணிய னுக்கும் இம்மாதம் 23-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது. இவ்வருட இறுதியில் அவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. ‘மவுனம் பேசியதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான த்ரிஷா ‘கில்லி’ ‘திருப்பாச்சி’, ‘கிரீடம்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘சாமி’, ‘மங்காத்தா’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அஜீத்துக்கு ஜோடியாக ‘என்னை அறிந்தால்’ படத்திலும், ஜெயம் ரவியுடன் […]

Continue reading …

இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்: சிறிசேனா வெற்றி முகம்; தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்ச !

Comments Off on இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்: சிறிசேனா வெற்றி முகம்; தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்ச !

இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனா முன்னிலை வகித்துள்ளார்; அதிபர் மகிந்த ராஜபக்ச தொல்வி முகம் கண்டுள்ளார். சற்று முன் வரை சிறிசேனா 30,33,122 (52.68%) வாக்குகள் பெற்று முன்னிலை. ராஜபக்ச 26,50,049 (46.02) வாக்குகள் பெற்று பின்னடைவு.இன்று (வியாழக்கிழமை) காலை 6.30 மணி நிலவரப்படி, தேச அளவில் சிறிசேனா 14,06,557 (52.49%) வாக்குகளுடன் முன்னிலையிலும், ராஜபக்ச 12,38,340 (46.21%) வாக்குகளுடனும் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். கொழும்பு, கம்பஹா, கண்டி, புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, திரிகோணமலை, […]

Continue reading …

நடிகைகளின் பின்னால் சுற்றும் ஜி.வி.பிரகாஷ்!

Comments Off on நடிகைகளின் பின்னால் சுற்றும் ஜி.வி.பிரகாஷ்!

ஏழாண்டுகள் காதலித்து மணந்த பின்னணி பாடகி சைந்தவியுடன் வாழ்க்கை கசந்ததா என்ன? இசையமைக்கும் பல வாய்ப்புகளை உதறிவிட்டு, நடிகைகள் பின்னால் சுற்றத்தொடங்கிவிட்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். முதல் படம் பென்சில் இன்னமும் வெளியாகவில்லை. அடுத்து நடித்த பேய்ப்படமும் திரைக்கு வரத்திணறுகிறது. ஜி.வி.பிரகாஷ் அடுத்த படத்துக்கு கால்ஷீட் கேட்டு திரிஷா, இலியானா, நயன்தாரா பின்னால் வழிந்தபடி சுற்றுகிறார். கேரவனில் போய் பேச்சு நடத்துகிறார். ஓட்டலில் ரூம் போட்டு மேற்படி நடிகைகளுடன் ஜோடியாக நடிக்கும்படி கெஞ்சுகிறார். ஆனால் பெரிய நடிகைகள் யாரும் […]

Continue reading …

நயன்தாராவுக்காக தாடியை துறந்தார், விஜய்சேதுபதி!

Comments Off on நயன்தாராவுக்காக தாடியை துறந்தார், விஜய்சேதுபதி!

நீண்ட நெடுங்காலமாகவே பாதி முகத்தை மூடிய தாடி மீசையுடன் படங்களில் நடித்துவந்த விஜய்சேதுபதி, இப்போது தாடி மீசையை முற்றிலுமாக மழித்து பளபளவென்று காட்சி தருகிறார். ஏன் எதற்காக? நயன்தாராவுடன் ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். நயனுக்கு ஜோடியாக நடிக்கும்போது தாடி மீசையுடனிருந்தால் எடுபடாது. நயன்தாராவும் விரும்பாததன் காரணமாக தாடி மீசைக்கு டாட்டா காட்டிவிட்டார். பாண்டிச்சேரியில் படப்பிடிப்பை பார்க்க வந்தவர்களுக்கு விஜய் சேதுபதியை அடையாளம் தெரியவில்லை. இதுதான் கொடுமை.

Continue reading …