Home » Entries posted by admin (Page 48)
Entries posted by admin

கோயம்பேடு பஸ் நிலையத்தில் மக்கள் வெள்ளம்: அமைச்சர் செந்தில்பாலாஜி 4 மணி நேரம் ஆய்வு

Comments Off on கோயம்பேடு பஸ் நிலையத்தில் மக்கள் வெள்ளம்: அமைச்சர் செந்தில்பாலாஜி 4 மணி நேரம் ஆய்வு

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நேற்று சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. சிறப்பு பஸ்களின் இயக்கம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சுமார் 4 மணி நேரம் ஆய்வு நடத்தினார். தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து 17-ம் தேதி முதல் 21-ம்தேதி வரை 9,088 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் […]

Continue reading …

பாகிஸ்தானை தூண்டிவிடும் இந்திய அதிகாரிகள்!

Comments Off on பாகிஸ்தானை தூண்டிவிடும் இந்திய அதிகாரிகள்!

              இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற பிறகு அவரது அதிரடி திட்டங்கள் இந்திய எதிர் கட்சிகளுக்குள் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய உணர்ச்சிகள் மறுபடி ஒருங்கிணைந்து செயல்படுவதைக் கண்ட இந்திய துரோகிகள், மதவாதத்தை தூண்ட முயற்சி செய்து தோல்வி அடைந்ததை சுட்டிக்காட்டுகிறார்கள். இதனால் கலக்கமுற்ற இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானைத் தூண்டிவிட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தேவையற்ற நிலையில் பாகிஸ்தான் படைகள் நமது எல்லைகளில் அத்துமீறி […]

Continue reading …

புயல் சேதத்துக்கு ரூ.2000 கோடி நிவாரணம்: சந்திர பாபு கோரிக்கை !

Comments Off on புயல் சேதத்துக்கு ரூ.2000 கோடி நிவாரணம்: சந்திர பாபு கோரிக்கை !

ஹுத்ஹுத் புயலால் ஆந்திர மாநிலம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதால் ரூ.2000 கோடி நிவாரணம் வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக, பிரதமர் மோடி தொலைபேசியில் சந்திர பாபு நாயுடுவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ஆந்திர மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக இருப்பதாக கூறினார். இந்நிலையில், ரூ.2000 கோடி நிவாரணம் வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, சந்திர பாபு நாயுடு கடிதம் […]

Continue reading …

ஆந்திராவை தாக்கியது ‘ஹ்த்ஹுத்’ புயல்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Comments Off on ஆந்திராவை தாக்கியது ‘ஹ்த்ஹுத்’ புயல்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வங்கக் கடலில் உருவான ‘ஹுத்ஹுத்’ புயல் நேற்று மதியம் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. சூறாவளி காற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி ஆந்திராவில் 6 பேரும், ஒடிஸாவில் 3 பேரும் உயிரிழந்தனர். இரு மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வங்கக் கடலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்தமான் தீவு அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘ஹுத்ஹுத்’ என பெயரிடப்பட்டது. […]

Continue reading …

ஜெ.வுக்கு எதிராக தெலுங்கு அதிகாரிகள்!

Comments Off on ஜெ.வுக்கு எதிராக தெலுங்கு அதிகாரிகள்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு தற்போது சட்ட உலகத்தில் பல கோணங்களில் அலசப்படுகிறது. தனி நபர்களின் உணர்ச்சி கொந்தளிப்பில் சட்ட விதிகளை ஆராயாமல் அளித்த தீர்ப்பா? இல்லை கடுமையான சட்டவிதிகளை ஒட்டுமொத்தமாக திணித்து அரசியல் வாழ்வை முடிக்கும் தீர்ப்பா? என்ற பட்டிமன்றம் நடக்கின்றதாம்.            தனிநபர்களின் உணர்ச்சி கொந்தளிப்பில் சட்டத்தின் அடிப்படையில் ஆராயப்பட்ட ஆவணங்கள் இந்தத் தீர்ப்பில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறதாம். அதாவது முரண்பாடுகள் அதிகம் தென்படும் […]

Continue reading …

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு படை வீரரால் சகாக்கள் 3 பேர் சுட்டுக் கொலை !

Comments Off on கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு படை வீரரால் சகாக்கள் 3 பேர் சுட்டுக் கொலை !

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இன்று அதிகாலை மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சக வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். சென்னை அருகே கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பாதுகாவலர்கள் இன்று அதிகாலை 5.15 மணியளவில் வழக்கமான அணிவகுப்புக்கு அழைக்கப்பட்டனர். அப்போது விஜய் பிரதாப் சிங் என்ற தலைமைக் காவலர் திடீரென தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில், கணேசன் – கூடுதல் துணை ஆய்வாளர், சுப்புராஜ் […]

Continue reading …

தமிழக விஞ்ஞானி சிவதாணு பிள்ளைக்கு லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது !

Comments Off on தமிழக விஞ்ஞானி சிவதாணு பிள்ளைக்கு லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது !

தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சிவதாணு பிள்ளையின் சேவையை பாராட்டி லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று வழங்கினார். விமான தொழில்நுட்பம், ஏவுகணை தொழில்நுட்பத்தில் புரிந்த சாதனைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு, பராட்டு பத்திரம், பதக்கம் ஆகியவை கொண்டதாகும். குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, விஞ்ஞானி சிவதாணு பிள்ளைக்கு விருதினை வழங்கினார். பிரம்மோஸ், பிருத்வி, […]

Continue reading …

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை: கோட்டையில் இன்று 15 துறை அதிகாரிகள் முக்கிய ஆலோசனை !

Comments Off on தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை: கோட்டையில் இன்று 15 துறை அதிகாரிகள் முக்கிய ஆலோசனை !

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் அதைச் சமாளிக்க தயார் நிலை யில் இருப்பது தொடர்பாக 15 துறைகளைச் சேர்ந்த உயகரதிகாரி களுடன், தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில், ராணுவ அதிகாரிகள், வானிலை மைய அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழைக்காலத் தில்தான் அதிக மழை கிடைக்கும். அப்போது, பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படும். ஏரிகளில் கரை உடைந்து ஊருக்குள் நீர் புகுந்துவிடும். சாலைகள் […]

Continue reading …

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஷாருக்கானுக்கு விருது !

Comments Off on பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஷாருக்கானுக்கு விருது !

இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு சர்வதேச பன்முகத்தன்மை (குளோபல் டைவர்சிட்டி) விருது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டது. உலக அளவில் பிரபலமாக விளங்குபவர்கள் மற்றும் குறிப் பிடத்தக்க சாதனை படைப்பவர் களுக்கு இந்த விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு இந்த விருதை ஜாக்கி சான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக் கான விருது வழங்கும் விழா லண்டன் நகரில் உள்ள இங்கி லாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 4-ம் தேதி நடந்தது. […]

Continue reading …

அமெரிக்க விஞ்ஞானி, நார்வே தம்பதிக்கு மருத்துவ நோபல் !

Comments Off on அமெரிக்க விஞ்ஞானி, நார்வே தம்பதிக்கு மருத்துவ நோபல் !

2014-ம் ஆண்டின் மருத்துவம் / உடற்கூறியல் துறைக்கான நோபல் பரிசை அமெரிக்கா, நார்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் மூவர் வென்றுள்ளனர். மூளை உயிரணுக்கள் குறித்த கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜான் ஓ’கீஃபே மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவ தம்பதியரான மே-பிரிட் மோசர், எட்வர்ட் ஐ. மோசர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. நாம் எங்கே இருக்கிறோம் என்பதை எப்படி நம் மூளை அடையளம் காண்கிறது? ஒரு இடத்தில் இருந்து இன்னொரு புதிய இடத்திற்கு எப்படி நம்மால் […]

Continue reading …