Home » Entries posted by admin (Page 51)
Entries posted by admin

வன்முறையை தவிர்ப்போம், வறுமையை ஒழிப்போம்: கோட்டையில் கொடியேற்றி பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

Comments Off on வன்முறையை தவிர்ப்போம், வறுமையை ஒழிப்போம்: கோட்டையில் கொடியேற்றி பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

68 சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, நாடு வளர்ச்சிப் பாதையில் புதிய உச்சத்தை எட்டும் என தான் நம்புவதாக கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி முதலில், டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் சரியாக காலை 7.30 மணியளவில் அவர் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டு இல்லை பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை […]

Continue reading …

தி.மு.க.வில் நடக்கும் சமாதான படலம்!

Comments Off on தி.மு.க.வில் நடக்கும் சமாதான படலம்!

தமிழர் குலத்தை அழிக்க துணிந்த இலங்கை அதிபருக்கு குடும்ப அரசியலால் ஆப்பு அடிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். ராஜபக்சே தனது மகனை அரசியலில் உயர்வுபடுத்தி அதிபருக்கான நிலையை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்தார். அதனை மோப்பம்பிடித்த அவரது இளவல் பாதுகாப்புத்துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்சே மறைமுக எதிர்ப்பை உருவாக்கி உள்ளார். தமிழக முதல்வரின் புகழை குறைக்கச் செய்த நடவடிக்கைகள் கோத்தபயவின் கைவண்ணம் என்ற கருத்து உலவுகிறது. சிங்கள புத்த பிட்சுக்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டிவிட்டு, ராஜபக்சேயின் அதிகாரத்தை பறிக்கத் திட்டமிட்டு உள்ளதாகக் […]

Continue reading …

கட்டுமானத் தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.127 கோடியில் புதிய திட்டங்கள்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

Comments Off on கட்டுமானத் தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.127 கோடியில் புதிய திட்டங்கள்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், 127 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். சட்டப்பேரவையில் இது தொடர்பாக முதல்வர் விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதன் விவரம்: நிதியுதவி ரூ.5 லட்சமாக உயர்வு: “பணியிடத்தில் பணியின் போது நிகழும் விபத்தின் காரணமாக அல்லது பிற இடங்களில் நிகழும் விபத்துகளின் காரணமாக பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர் இறக்கும் நேர்வில், அவர்தம் நியமனதாரருக்கு […]

Continue reading …

நெற்றிக்கண் செய்தி எதிரொலி

Comments Off on நெற்றிக்கண் செய்தி எதிரொலி
நெற்றிக்கண் செய்தி எதிரொலி

தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில்  உதவி  தொடக்க கல்வி அலுவலராக இருப்பவர் கணேசன் இவர் பல ஆசிரியர்களுக்கு மாவட்ட தொடக்ககல்வி அலுவலரின் கையொப்பத்தை இவரே போட்டு கோப்பு தயார் செய்து பணி மாறுதல் உத்தரவு வழங்கி இருந்தார். இதை நெற்றிக்கண் பிராடு கணேசன் என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது. இதைதொடர்ந்து நடவடிக்கை எடுத்து மொரப்பூர் ஏ.இ.ஒ கணேசன்-ஐ பணி இடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. இது சரியான நடவடிக்கை தான் அதே சமயத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் […]

Continue reading …

திட்டமிட்டபடி ஆக.24-ல் யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: மத்திய அரசு!

Comments Off on திட்டமிட்டபடி ஆக.24-ல் யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: மத்திய அரசு!

யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி ஆகஸ்ட் 24-ல் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். யூபிஎஸ்சி தேர்வு சர்ச்சை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய வெங்கய்ய நாயுடு, “நடப்பு ஆண்டில் முதல்நிலைத் தேர்வு தேதியில் மாற்றம் ஏற்படுத்த சாத்தியம் இல்லை. யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி ஆகஸ்ட் 24-ல் நடைபெறும். இவ்விவகாரத்தில் அரசியல் கட்சிகளுடனும், தேர்வு வாரியத்தினருடனும் […]

Continue reading …

முதல்வரோடு மோதும் இலங்கை அதிபர்!

Comments Off on முதல்வரோடு மோதும் இலங்கை அதிபர்!

இலங்கை அரசு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கொச்சைப்படுத்தப்பட்ட விமர்சனங்களை அனுமதித்தது உலக நாடுகளின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. இலங்கை அதிபரின் ஆணவம் தமிழ் துரோகிகளால் மெருகேற்றப்பட்டு, இந்திய அரசின் சுயநல அரசியல்வாதிகளின் ஆதரவுடன் வெளிப்படுத்த முயற்சி செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கருத்து உலவுகிறது. ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக எதிர்க்க பதுங்கும் தமிழக அரசியல் கோழைகள், இலங்கை அதிபரை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள் என்ற கருத்து உலவுகிறது. உண்மையில் இந்த விமர்சனங்களால் அலறும் இலங்கை அரசியல்வாதிகள், […]

Continue reading …

அதிமுகவில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை: முதல்வர் ஜெயலலிதா பேச்சு

Comments Off on அதிமுகவில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை: முதல்வர் ஜெயலலிதா பேச்சு

அதிமுகவில் தவறு செய்பவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார். சட்டப்பேரவையில் சட்டம், வனம், சுற்றுச்சூழல், பணியாளர் நலன் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது வியாழக்கிழமை நடந்த விவாதம் வருமாறு: முத்துக்குமார் (தேமுதிக): தமிழக சிறைகளில் அடிப்படை வசதிகள் இல்லை. முறையான பராமரிப்பு கிடையாது. அமைச்சர் பா.வளர்மதி: உறுப்பினர் எந்த சிறைக்கு சென்று பார்த்தார்? அவரது கட்சியினர் யாராவது சிறைக்குப் போய் வந்தார்களா? (இவ்வாறு அமைச்சர் கேட்டதும் தேமுதிக உறுப்பினர் கள் […]

Continue reading …

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது!

Comments Off on காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது!

ஸ்காட்லாந்து: காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.கடந்த 23 ஆம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. இதன் நிறைவு விழா ஹம்ப்டன் அரங்கில், இசை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கைகளுடன் நிறைவடைந்தது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணி அளவில், நிறைவு விழா நிகழ்ச்சிகள் களைகட்ட தொடங்கின.முதலில் நட்சத்திரம் வடிவிலான விழா மேடையின் எதிரே, குடில்கள் போல் வடிவமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கூடாரங்களை கொண்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடனமாடினர். பின்னர், […]

Continue reading …

காமன்வெல்த் ஹாக்கியில் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம்

Comments Off on காமன்வெல்த் ஹாக்கியில் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம்

காமன்வெல்த் ஹாக்கி இறுதிச் சுற்றில், ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்ற இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. கிளாஸ்கோவில் இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி 0-4 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. ஆடவர் ஹாக்கி போட்டியில் இரண்டாம் இடம் வகித்ததால், இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிட்டியது. முன்னதாக, 2010-ல் நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் இந்தியாவை ஆஸ்திரேலிய ஹாக்கி அணி தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில், தனக்கு கிடைத்த மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் […]

Continue reading …

தற்கொலை கோழைத்தனம், வாழ்ந்து காட்டுங்கள்: விஜயலட்சுமிக்கு முதலவர் கடிதம்!

Comments Off on தற்கொலை கோழைத்தனம், வாழ்ந்து காட்டுங்கள்: விஜயலட்சுமிக்கு முதலவர் கடிதம்!

சென்னை: தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமிக்கு, உயிரை மாய்த்துக்கொள்ளும் செயலில் ஈடுபட வேண்டாம், வாழ்ந்து காட்டுங்கள் என்று முதலவர் ஜெயலலிதா கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் குரல் கொடுத்து கொண்டு வருவதை கொச்சைப்படுத்தி, இலங்கை நாட்டின் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த, அவதூறு கட்டுரை பற்றிய செய்தி அறிந்து மனமுடைந்து, தற்கொலைக்கு முயன்ற சேலம் மாவட்டம், பெரமனூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் […]

Continue reading …