Home » Entries posted by admin (Page 6)
Entries posted by admin

திருச்சி நாகமங்கலத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Comments Off on திருச்சி நாகமங்கலத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தேசிய ஊட்டச்சத்து மாதம், சுதந்திர இந்தியாவின் வைரவிழா, கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, திருச்சிராப்பள்ளியில் உள்ள நாகமங்கலம் சமுதாய அரங்கில், திருச்சி களவிளம்பரத்துறை அலுவலகம் நடத்தியது.  மணிகண்டம் பஞ்சாயத்துத் தலைவர் கமலம் கருப்பையா இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.  நாகமங்கலம் பஞ்சாயத்து தலைவர் வெள்ளைச்சாமி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். திருச்சி களவிளம்பரத்துறை அதிகாரி தேவி பத்மநாபன், துவக்க உரையாற்றினார்.  ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அவர் கூறினார்.  ஊட்டச்சத்துத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால், கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி தொடங்கப்பட்டது என்றும், குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிப் […]

Continue reading …

கோவளம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி சான்றிதழ்!

Comments Off on கோவளம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி சான்றிதழ்!

கடற்கரை மற்றும் கடல்சார் சூழலியலைப் பாதுகாப்பதில் இந்தியாவின் உறுதிக்கான மற்றுமொரு அங்கீகாரமாக, தமிழ்நாட்டில் உள்ள கோவளம், புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு சர்வதேசப் புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், “கோவளம் மற்றும் ஈடன் கடற்கரைகள் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலமும், 2020-இல் அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளின் மறுசான்றினாலும் இந்தியாவில் தற்போது 10 சர்வதேச நீலக்கொடி கடற்கரைகள் உள்ளன என்று […]

Continue reading …

கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்!

Comments Off on கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் அனைவரையும் கோவிட் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டு. மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர […]

Continue reading …

புலிக்கொடியேற்றிவைத்த சீமான்!

Comments Off on புலிக்கொடியேற்றிவைத்த சீமான்!

அம்பத்தூர் தொகுதியில் 3 இடங்களில் நினைவுக் கல்வெட்டுகளைத் திறந்துவைத்து புலிக்கொடியேற்றிவைத்த சீமான். 19-09-2021 அன்று அம்பத்தூர் தொகுதியில் மேற்கு பகுதிக்குட்பட்ட(82வது வட்டம்) மேனாம்பேடு கருக்கு விரைவுச்சாலை பாலம் அருகில் எல்லைக்காத்த மாவீரன் வனக்காவலன் வீரப்பனார் நினைவுக்கொடிக்கம்பம், பட்டறைவாக்கம் (84வது வட்டம்) பெரியகுளம் அருகில் சமூகநீதிப்போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுக்கொடிகம்பம் மற்றும் கொரட்டூர் குழந்தை இயேசு ஆலையம் அருகில் தமிழ்த்தேசியப் போராளி வ.கடல்தீபன் நினைவுக்கொடிகம்பம் ஆகியவற்றில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கல்வெட்டுக்களைத் திறந்து […]

Continue reading …

கோவிட் தடுப்பூசி: 80 கோடியைத் கடந்து சாதனை !

Comments Off on கோவிட் தடுப்பூசி: 80 கோடியைத் கடந்து சாதனை !

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 80 கோடியைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 85,42,732 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 79,15,457 முகாம்களில் 80,43,72,331 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 38,945 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,26,71,167 ஆக உயர்ந்துள்ளது. நம் நாட்டில் குணமடைந்தவர்களின் விழுக்காடு, 97.68 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து […]

Continue reading …

நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு!

Comments Off on நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு!

அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “காலப்போக்கில் நான் பெற்ற ஏராளமான அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகள் ஏலத்தில் விடப்பட உள்ளன. நமது ஒலிம்பிக் போட்டியின் நாயகர்கள் வழங்கிய சிறப்பு நினைவுப் பரிசுகளும் இதில் அடங்கும். இந்த ஏலத்தில் கலந்து கொள்ளுங்கள், இதன் மூலம் கிடைக்கும் தொகை நமாமி கங்கை முன்முயற்சிக்கு வழங்கப்படும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue reading …

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும் – எடப்பாடி பழனிசாமி!

Comments Off on நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும் – எடப்பாடி பழனிசாமி!

நெல் விளைச்சல் அதிகமுள்ள மாவட்டங்களில் செயல்பட்டு வந்த பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, விவசாயிகளின் நலன் கருதி அவற்றை காலம் தாழ்த்தாமல் உடனடியாகத் திறக்க வேண்டும் என, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ஈபிஎஸ் இன்று (செப். 19) வெளியிட்ட அறிக்கை: ஏற்கெனவே எனது அறிக்கையில் தமிழகத்தில், குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் ஏரிப் பாசனம் மூலம் நெல் பயிரிட்ட மாவட்டங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திமுக […]

Continue reading …

TNPSC தொகுதி 4 பணிகள்: இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும்!

Comments Off on TNPSC தொகுதி 4 பணிகள்: இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 3 வகையான அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கைகள் கடந்த ஒரு மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரசுப் பணிக்கு ஆள்தேர்வு தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில் சில பணிகளுக்கு நடத்தப்பட வேண்டிய கலந்தாய்வு ஓராண்டுக்கும் மேலாக நடத்தப்படாதது வருத்தமளிக்கிறது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் உள்ளிட்ட 7 வகையான பணிகளுக்கு 6417 பேரைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை கடந்த  2019 ஆம் ஆண்டு ஜூன் […]

Continue reading …

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிம்பு பாடிய பாடல் !

Comments Off on சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிம்பு பாடிய பாடல் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு, இவர் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில், மாநாடு, பத்து தல உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.  விரைவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு பாடல் பாடியுள்ளார், இப்பாடல் இன்று ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சென்னை – மும்பை அணிகள் இடையேயான […]

Continue reading …

தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் !

Comments Off on தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் !

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி விரைவாக எடுத்துக் கொள்ள கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 23 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அதை தொடர்ந்து இன்று மீண்டும் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இந்த முறை 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது, காலை 7 மணி முதல் மாலை 7 மண் […]

Continue reading …