
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டினால் ரூபாய் 100 முதல் 5000 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி கடந்த சில நாட்களாக சென்னையை தூய்மைப்படுத்தும் பணியை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நீர்வள தடங்கள் மற்றும் பொது இடங்கள் ஆகிய பகுதிகளில் குப்பைகளை கொட்டினால் 100 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. […]
Continue reading …
சீமான் ஒரு பாஜக அடிவருடி என்று காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும் கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ஜோதிமணி எம்.பி கடுமையாக சாடியுள்ளார். சீமான் குறித்து ஜோதிமணி ட்விட்டரில் பதிவிட்டதாவது : சீமான் ஒரு பாஜக அடிவருடி, பாஜக வெறுப்பு புரையோடிக்கிடக்கும், கல்வி,வேலைவாய்பு, தொழில், சமூகநீதியை முன்னிறுத்தும் தமிழகத்தில், தன்னால் நேரடியாக களமிறங்கி மத, கலவர அரசியலை செய்ய முடியவில்லை என்பதால் பாஜக சீமானை களமிறக்கியிருக்கிறது. எச்சரிக்கை தேவை என தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடந்த கூட்டத்தில் சீமான் […]
Continue reading …
கொல்கத்தா அணிக்கெதிரான இறுதிப் போட்டி வெற்றிக்கு பின் கோப்பையை வாங்கிய டோனி, இளம் வீரர் தீபக் சஹாரிடம் கொடுத்து அழகு பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் நேற்றைய இறுதிப் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில், போட்டி முடிந்த பின்பு, கோப்பை அணியின் கேப்டன் […]
Continue reading …
நடுக்கடலில் ஈரானின் எண்ணெய் கப்பல் மீதான கடற்கொள்ளையர்களின் தாக்குதலை ஈரான் கடற்படை முறியடித்துள்ளது. கப்பல் போக்குவரத்திற்கு ஒரு முக்கிய நீர்வழி பாதையாக திகழும் ஏடன் வளைகுடாவிலே இச்சம்பவம் நடந்துள்ளது. ஏடன் வளைகுடாவில் பயணித்துக்கொண்டிருந்து ஈரானின் எண்ணெய் கப்பலை, ஐந்து அதிவேக படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து, ஈரான் கடற்படையிடமிருந்து சரமாரியான துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்ட கடற்கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். ஏடன் வளைகுடாவில் ஈரான் கப்பல் குறிவைக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆகஸ்ட் […]
Continue reading …
நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு நேரில் சென்ற வி.கே.சசிகலா கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுக கொடி கட்டிய காரில் புறப்பட்ட சசிகலாவுக்கு, வழியெங்கும் அதிமுக கொடியுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர். ஒருபக்கம் அதிமுகவின் பொன் விழா கொண்டாட்டங்களை அதிமுக தலைவர்கள் நடத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் சசிகலா தீவிர அரசியலில் களமிறங்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் […]
Continue reading …
ஈஷாவில் உள்ள லிங்க பைரவியில் நவராத்திரி திருவிழா அக்.7-ம் தேதி முதல் அக்.15-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளதுஈஷாவில் உள்ள லிங்க பைரவியில் நவராத்திரி திருவிழா அக்.7-ம் தேதி முதல் அக்.15-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, அக். 8, 9, 10, 12, 15 ஆகிய தினங்களில் சம்ஸ்கிரிதி மாணவர்களின் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் லிங்க பைரவி யூ- டியூப் சேனலில் மாலை 6.45 மணிக்கு நேரலை ஒளிப்பரப்பு செய்யப்படும். இதில் […]
Continue reading …
அறுவடை செய்த நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்க இணைய வழியில் முன்பதிவு செய்யவேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே போதிய அளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்றி விளைந்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில், எவ்வித முன்னறிவிப்புமில்லாத இந்த திடீர் உத்தரவு தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேட்டையே வெளிப்படுத்துகிறது. அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், அறுவடை செய்த […]
Continue reading …
தமிழகம் முழுவதும் இன்று (03.10.2021) நடைபெற்ற நான்காவது மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம்களை காலை 7 மணி முதல் தேனி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களில் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 24,882 மையங்களில் நடைபெற்றது. இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி அளிக்க திட்டமிடப்பட்டது. முதலாவது மாபெரும் கோவிட் […]
Continue reading …
இந்திய யோகா சங்கத்தின் நிர்வாகக் குழு, இச் சங்கத்தின் உச்ச அமைப்பாகும். இதில் காயத்ரி பரிவாரின் டாக்டர் பிரணவ் பாண்டியா, ஈஷா அறக்கட்டளையின் நிறுவனராகிய சத்குரு ஜக்கி வாசுதேவ், சாந்தா குரூஸ் யோகா நிறுவனத்தின் டாக்டர் ஹன்சா யோகேந்திரா, ரிஷிகேஷ் பரமார்த் நிகேதனின் சுவாமி சித்தானந்த் சரஸ்வதி, கைவல்யதாமா யோகா நிறுவனத்தின் தலைவராக தற்போது உள்ள எஸ். ஓபி திவாரி, சஹாஜ் மார்க்கின் கமலேஷ் பட்டேல், மோக்ஷயாதன் யோக சன்ஸ்தானின் சுவாமி பாரத் பூஷன் மற்றும் மொரார்ஜி […]
Continue reading …
நடிகர் சூர்யாவின் 39-வது படம் ஜெய் பீம், இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் […]
Continue reading …