
நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது காதலருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசானம் செய்தார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகியது. இந்த நிலையில் நயன்தாராவை அடுத்து பிரபல நடிகை பிரியா ஆனந்த் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார், அவருக்கு கோவில் வளாகத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர்.
Continue reading …
கொச்சின் துறைமுகத்தில் 15 நாள் தூய்மை பணி கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. பணி செய்யும் இடங்கள், அலுவலக வளாகங்கள், படகுகள் மற்றும் இழுவை படகுகள், துறைமுகத்தின் பொது பகுதிகளை ஊழியர்கள் சுத்தம் செய்தனர். இதன் நிறைவு நாளான நேற்று, துறைமுக பகுதிக்குள் தூய்மையை பராமரிக்க ஊழியர்கள் மற்றும், வில்லிங்டன் தீவு பகுதியில் உள்ள இரண்டு மாநகராட்சி வார்டு ஊழியர்களுக்கு தூய்மை படுத்துவதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை கொச்சி துறைமுக கழக […]
Continue reading …
தொலை தொடர்புத்துறை செயலாளராக இருந்த அன்சு பிரகாஷ் ஐ.ஏ.எஸ்., நேற்றுடன் ஒய்வு பெற்றதையடுத்து, புதிய செயலாளராக கே.ராஜாராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக இவர், மத்திய நிதியமைச்சக்தின் பொருளாதார விவகாரத்துறையில் கூடுதல் செயலாளராக பணியாற்றினார். கடந்த 1989 ஆண்டு தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், மத்திய அரசின் பல பதவிகளை வகித்துள்ளார். தமிழக அரசிலும், சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவன நிர்வாக இயக்குனர், வணிகவரித்துறை ஆணையர் உட்பட பல பதவிகளை வகித்துள்ளார்.
Continue reading …
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ‘‘தேசத்தந்தை – மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ அநீதிக்கு எதிராக புதிய போராட்ட வழியை, மகாத்மா காந்தி காட்டினார் – அது உண்மை மற்றும் அகிம்சை மற்றும் இது மனிதகுலத்தின் மீது ஒரு நிரந்தர முத்திரையை விட்டுச்சென்றது. சத்தியாகிரகம் மற்றும் அகிம்சை முறையில், […]
Continue reading …
துபாயில் இருந்து சென்னை வந்த இரு ஆண் பயணிகளிடம் இருந்து, 1.38 கிலோ தங்கம், மற்றும் எலக்ட்ரானிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உளவுத் தகவல் அடிப்படையில் துபாயில் இருந்து சென்னை வந்த, இரு ஆண் பயணிகளை, சுங்கத்துறையினர் இடைமறித்து, அவர்களின் உடைமைகளைச் சோதனை செய்தனர். அப்போது 24 தங்கத்துண்டுகள் லேப்டாப் சார்ஜரில், கருப்பு டேப் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த தங்கத் துண்டுகளின் எடை 1.38 கிலோ. இவற்றின் மதிப்பு ரூ.58.04 இலட்சம். இவை தவிர மேலும் 15 ஐ-போன்கள், லேப்டாப்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றைக் கடத்தி வந்த இருவரும் சுங்கச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இது குறித்து மேலும் விசாரணை நடப்பதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.
Continue reading …
லதா மங்கேஷ்கர் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்து, வாழ்த்து தெரிவுத்துள்ளார். பிரதமர் தனது டுவிட்டரில், “சகோதரி லதாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். அவருடைய இனிமையான குரல் உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இந்திய கலாச்சாரத்தின் மீதான அவரது ஆர்வம் மற்றும் பணிவான குணத்திற்காக அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். தனிப்பட்ட முறையில், அவருடைய ஆசீர்வாதம் பெரும் வலிமையை அளிக்கும். சகோதரி லதாவின் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நான் பிரார்த்திக்கிறேன்”, என்று கூறியுள்ளார்.
Continue reading …
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் கோட்டம் பல்லாவரம், அஸ்தினாபுரம், சேலையூர் உட்பட்ட பகுதிகளில் இன்று (26.09.2021) நடைப்பெற்று வரும் மாபெரும் மூன்றாவது தடுப்பூசி முகாமை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பல்லாவரம் நகராட்சியில் உள்ள நெமிலிச்சேரி ஏரியில் படர்ந்து இருந்த ஆகாய தாமரை அகற்றும் பணி மற்றும் ஏரியினை ஆழப்படுத்தி கரையை பலம்படுத்தும் பணியினை பார்வையிட்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையானது 24.57 லட்சம் ஆகும். […]
Continue reading …
25.09.2021: டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரும், இந்திய தொழில்நிறுவனக் கூட்டமைப்பின் தலைவருமான டி.வி. நரேந்திரன், தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளியின் (என்.ஐ.டி திருச்சி) 57 வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். அவர் உரையாற்றுகையில், கற்றலுக்கு முடிவே இல்லை; ஒருவர் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கற்றுக்கொண்டே இருக்கின்றார் என்றார், அவர் மாணவர்களை விடாமுயற்சியுடன் தங்கள் கனவுகளைத் தொடருமாறு கூறினார். அவர் மாணவர்களை உறவுகளை கட்டமைக்கவும்,வளர்க்கவும், அவைளிடமிருந்து கற்றுக்கொள்ளவும் வலியுறுத்தினார். தான் […]
Continue reading …
இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும், அத்தகைய கணக்கெடுப்புகளின் மூலம் துல்லியமான விவரங்களைத் திரட்ட முடியாது என்றும் மத்திய அரசு கூறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில்லை என்று 1951-ஆம் ஆண்டே கொள்கை முடிவு எடுக்கப்பட்டு விட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு காலத்திற்கு சற்றும் பொருந்தாதது ஆகும். 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மராட்டிய அரசு […]
Continue reading …
ஆவினும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதல்ல -ஆவின் தரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை ! தாய்ப்பாலுக்கு நிகரான பால் என தமிழக அரசால் விளம்பரப்படுத்தப்படும் ஆவின் பால் நிறுவனத்தில் மதுரை, சேலம், வேலூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் எடுக்கப்பட்ட சுமார் 10,295 பால் மாதிரிகளில் 51% பால் மாதிரிகள் அரை மணி நேரத்தில் கெட்டு விடக் கூடியதாக தரம் குறைந்து இருந்ததாக கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள தணிக்கைத்துறை […]
Continue reading …